Header Ads



"தங்களுக்கு பாதுகாப்பை அளிக்கக்கூடியவர், கோத்தபாயதான் என சிங்களவர் முடிவு செய்துள்ளார்கள்"

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளின் போதே, ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறப்போகின்றார்கள் என்பது தீர்மானமாகி விட்டதாக மூத்த ஊடகவியலாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ண் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கி விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த ஏப்ரலில் இலங்கையில், குண்டுவெடிப்புகள் நடந்தபோதே, ஜனாதிபதி தேர்தலில் அங்கு யார் வெற்றிபெறப்போகின்றார்கள் என்பது தீர்மானமாகிவிட்டது.

மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை, கடந்த 2009ல் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டதிலிருந்து, தேசப் பாதுகாப்பு என்ற விஷயம் என்பதில் அவரைத் தவிர வேறு யாராலும் உரிமை கொண்டாட முடியாத விடயமாகவே இருந்தது.

ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. 27ம் திகதி கோத்தபாய ராஜபக்ச தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார்.

அப்போது அவருடைய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனகூட இதை முடிவுசெய்யவில்லை. மே மாதம் நான் மகிந்த ராஜபக்சவை சந்தித்திருந்தேன். அப்போது கூட அவர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

எனினும், கோத்தபாய ராஜபக்ச ஏப்ரல் மாதத்திலேயே பணிகளைத் துவங்கிவிட்டார். போத்தபாய ராஜபக்ச பாதுகாப்புத் துறை செயலராக இருந்தவர். போரை வழிநடத்தியவர்.

ஆகவே ஏப்ரல் 21க்குப் பிறகு இந்த விஷயம்தான் மக்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் பொருளாதாரப் பிரச்சனைகளும் பெருகிவந்தன.

அதனால், தற்போதைய அரசைச் சேர்ந்த யாரும் வெல்ல முடியாத சூழலும் உருவானது. 35 ஜனாதிபதி வேட்பாளர்களில் பிரதான வேட்பாளர்கள் இருவர். ஒருவர் கோத்தபாய ராஜபக்ச. மற்றொருவர் சஜித் பிரேமதாஸ.

ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித், தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். ஆனால், பொருளாதார ரீதியில் சாதித்தவர் அல்ல. கோத்தபாயவைப் பொறுத்தவரை, அவர் போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்ற பெயர் இருக்கிறது.

தங்கள் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் சிங்களவர்கள் எல்லாம் திரண்டுவந்து கோத்தபாயவுக்கு வாக்களித்துவிட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. காரணம் இருவருமே இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சிங்களவர்களைப் பொறுத்தவரை, தங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பை அளிக்கக்கூடியவர் கோத்தபாயதான் என முடிவுசெய்தார்கள்.” என்று கூறியுள்ளார்.

2 comments:

  1. எனவே... கோத்தா தெரிவானதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என அவர்களும் உரிமை கோரலாம்

    ReplyDelete
  2. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழட்டு பிணங்கள் பிரபாகரனோடு புதைக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கையை தூக்கிப்பிடித்ததும் ஒரு காரணம். இந்த இடத்தில் தான் ரணில் TNA கிழடுகளை கொண்டு சஜித்தை பழிவாங்கினான்

    ReplyDelete

Powered by Blogger.