Header Ads



பாபரி மஸ்ஜித்தின் கீழ், கோயில் இருக்கவேயில்லை - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட - பேராசிரியர் டி.என். ஜா

பேராசிரியர் டி.என். ஜா பிரபல வரலாற்று ஆய்வாளர். இன்று -09- வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள "ராம்ஜென்ம பூமி-பாபர் மசூதி: தேசத்திற்கு வரலாற்றாளர்களின் அறிக்கை" என்ற அறிக்கையை எழுதிய வரலாற்று ஆய்வாளர் குழுவில் இடம் பெற்றிருந்தவர்.

போராசிரியர் சூரஜ் பான், அர்தர் அலி, ஆர். எஸ். ஷர்மா மற்றும் டி.என்.ஜா ஆகிய அந்த நான்கு சுயாதீன வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியல் சான்றுகளில் தீவிர ஆய்வு நடத்தி, பாபர் மசூதிக்கு அடியில் கட்டப்பட்டிருந்தது இந்து கோயில் அல்ல என்று அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

கேள்வி: இந்த தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இந்த தீர்ப்பு இந்து மத நம்பிக்கைக்கு முதன்மை அளிக்கிறது. குறைபாடுடைய தொல்லியல் ஆய்வை நம்பி இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

கேள்வி: நீங்கள் ஆய்வு செய்து உண்மை கண்டறிந்த "ராம் ஜென்மபூமி-பாப்ரி மஸ்ஜித்: தேசத்திற்கு வரலாற்று ஆய்வாளர்கள் அறிக்கை"யின் முடிவு எதுவாக இருந்தது?

பதில்: நாங்கள் எங்ளுக்கு கிடைத்த எல்லா சான்றுகளையும் கவனத்தில் கொண்டு, பாபர் மசூதி இடிக்கப்படும் முன்னர், 1992ம் ஆண்டு அரசிடம் இந்த அறிக்கையை சமர்பித்தோம். தீவிர ஆய்வுக்குப் பின்னர், இந்த மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருக்கவில்லை என்று அதில் தெரிவித்திருந்தோம்.

சர்ச்சைக்குரிய இடத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகேள்வி: இந்திய தொல்லியல் துறை (ஏஏஸ்ஐ) எப்படி பங்காற்றி இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: அயோத்தி சர்ச்சையில் இந்திய தொல்லியல் துறை நிச்சயமில்லாத தகவல்களை அளித்து பங்காற்றியுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்படும் முன்னர், அயோத்தியில் கிடைத்த தொல் பொருட்களை நாங்கள் பரிசோதனை செய்ய பழைய கோட்டைக்கு சென்றபோது, மிகவும் முக்கிய சான்றுகள் இருந்த அகழி 4-ன் தளக் குறிப்பு புத்தகத்தை தொல்லியல் துறை எங்களுக்கு காட்ட மறுத்தது.

சான்றுகளை மறைப்பதை இது தெளிவாக காட்டியது.

பாபர் மசூதியை இடித்த பின்னர், முன் தீர்மானத்தோடு இந்திய தொல்லியல் ஆய்வு துறை அகழ்வாய்வு நடத்தியது. கோயில் இருந்தது என்ற கருத்துக்கு முரணாக இருந்த சான்றுகளை அது மறைத்து விட்டது.

இந்திய தொல்லியல் துறை ஓரிடத்தை அகழ்வாய்வு செய்யும்போது அறிவியல்பூர்வ விதிகளை கடைபிடிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி: இந்தியாவுக்கு அயோத்தி தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

பதில்: இந்த தீர்ப்பு பொரும்பான்மைவாதத்துக்கு தூபம் போடுகிறது. இது நமது நாட்டுக்கு நல்லதல்ல.

4 comments:

  1. அஜன்! இவரெல்லாம் உன்போன்ற சிற்றறிவு கொண்டவரல்ல. பேரறிகைத் திறன் கொண்டவர்கள். அஜன் என்ன தூக்கமா?

    ReplyDelete
  2. உண்மை கூறியுள்ளார்.ஆனால் அங்கே நீதி கொலை செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமர் கோவில் மட்டும் இருப்பதே நீதி-நியாயம்.
    அதே போல் ஜீசஸ் பிறந்த இடமான பெத்லகம்-ஜெருசலம் பகுதிகளில் கிருஸ்தவ தேவாலயம் மட்டுமே இருக்கவேண்டும்.

    மக்காவில் பிள்ளையார் கோவில் கட்ட அனுமதிப்பீர்களா? - அது என்ன உங்களுக்கு ஒரு நியாயம், மற்றயவர்களுக்கு இன்னொரு நியாயம்.

    ReplyDelete
  4. we dont need lands @ buildings, islam never relies on materials.

    ReplyDelete

Powered by Blogger.