November 06, 2019

"முஸ்லிம்க‌ள் ப‌ல‌ருக்கு, ஞாப‌க‌ ம‌ற‌தி அதிக‌ம்"

முஸ்லிம்க‌ள் ப‌ல‌ருக்கு ஞாப‌க‌ ம‌ற‌தி அதிக‌ம் என்ப‌தாலும் முஸ்லிம் காங்கிர‌ஸ் போன்ற‌ க‌ட்சிக‌ள் அவ‌ர்க‌ளை சிந்திக்க‌ விடாம‌ல் போலி பிர‌சார‌ம் செய்வ‌தாலும் த‌ம‌க்கு பெரும் சேவை செய்த‌ ம‌ஹிந்த‌, கோட்டா ப‌ற்றி முஸ்லிம்கள் த‌ப்பாக‌ நினைத்துக்கொண்டிருக்கிறார்க‌ள் என‌ உலமா க‌ட்சித்த‌லைவ‌ர் தெரிவித்தார்.

அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

ஒருவ‌ர் த‌ம‌க்கு எதிரியாக‌ தெரிந்தால் அவ‌ரை எதிர்க்கும் எதிரிக‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ தெரிகிறார்க‌ள். ம‌ஹிந்த‌வை எதிரியாக‌ பார்க்கும் முஸ்லிம் ச‌மூக‌ம் ச‌ந்திரிக்காவை ந‌ண்ப‌ராக‌ பார்க்கிற‌து. இதே ச‌ந்திரிக்கா முஸ்லிம் ச‌மூக‌த்துக்கும் அவ‌ரை ஆட்சிபீட‌த்தில் ஏற்றிய‌ த‌லைவ‌ர் அஷ்ர‌புக்கும் செய்த‌ துரோக‌ங்க‌ளை முஸ்லிம் ச‌மூக‌ம் ம‌ற‌ந்து விட்ட‌து.

1996ம் ஆண்டு முஸ்லிம்க‌ளின் ப‌றிக்க‌ப்ப‌ட்ட‌ தீக‌வாப்பி காணிக‌ளுக்காக‌ மாற்றுக்காணி வ‌ழ‌ங்க‌ அமைச்ச‌ர் அஷ்ர‌ப் ந‌ட‌வ‌டிக்கை எடுத்திருந்தார். காணி ப‌த்திர‌ங்க‌ளும் த‌யார் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌.

இந்த‌ நிலையில் ஜே வி பியின‌ர் அம்பாரை ந‌க‌ருக்கு வ‌ந்து முஸ்லிம்க‌ளுக்கு காணிக‌ளை வ‌ழ‌ங்க‌ கூடாது என‌ ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌தால் அவ‌ற்றை வ‌ழ‌ங்காம‌ல் த‌டுத்த‌வ‌ர் இந்த‌ ச‌ந்திரிக்காவாகும்.

2001ம் ஆண்டு ஒரு சிக‌ர‌ட் பிர‌ச்சினையில் மாவ‌ன‌ல்ல‌ தாக்க‌ப்ப‌ட்ட‌ போது அதனை உட‌ன‌டியாக‌ க‌ட்டுப்ப‌டுத்தாம‌ல் மூன்று நாட்க‌ள் மாவ‌ன‌ல்லையையை எரிய‌ விட்டு முசுப்பாத்தி பார்த்தார். 10 வ‌ருட‌ம் ஆட்சி செய்த‌ ச‌ந்திரிக்கா ஒரு மௌல‌விக்கேனும் மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ம் கொடுக்க‌வில்லை.

இவை அத்த‌னையையும் ம‌ற‌ந்த‌ முஸ்லிம் ச‌மூக‌ம் க‌ட‌ந்த‌ ஜனாதிப‌தி தேர்த‌லில் ர‌ணிலின் ந‌ல்லாட்சியை கொண்டு வ‌ந்தால் ஞான‌சார‌வை நாய்க்கூண்டில் அடைப்போம் என்ற‌ ச‌ந்திரிக்காவின் பேச்சை ந‌ம்பி இந்த‌ ஆட்சியை கொண்டு வ‌ந்த‌து. க‌டைசியில் என்ன‌ ந‌ட‌ந்த‌து. முஸ்லிம்க‌ள் மிக‌ப்பெரும் துன்ப‌ங்க‌ளை அனுப‌விக்க‌ விட்டுவிட்டு வெளிநாடு போய் விட்டு இப்போது வ‌ந்து ம‌ஹிந்த‌, கோட்டாவுக்கெதிராக‌ பேசுகிறார்.

ஒரு உண்மை முஸ்லிம் இர‌ண்டு த‌ட‌வைக‌ள் ப‌டுகுழியில் விழ‌மாட்டான். ச‌ந்திரிக்காவை ந‌ம்பிய‌ முஸ்லிம் ச‌மூக‌ம் ப‌ல‌ த‌ட‌வை குழியில் விழுந்து விட்ட‌து.

இந்த‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ளில் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஆட்சியின் போதே முஸ்லிம் ச‌மூக‌ம் பாரிய‌ ப‌ல‌ ந‌ன்மைக‌ளையும் அபிவிருத்திக‌ளையும் பெற்ற‌து. இறுதி கால‌த்தில் சில‌ த‌வ‌றுக‌ள் ந‌ட‌ந்தாலும் அந்த‌த்த‌வ‌றை ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பு த‌வ‌றுதான் என‌ ஏற்றுக்கொண்டுள்ள‌து. ஆனால் இந்த‌ ர‌ணில், ச‌ஜித் அர‌சில் முஸ்லிம்க‌ளுக்கு ந‌ட‌ந்த‌ கொடூர‌ங்க‌ள் த‌ம‌து த‌வ‌றே என‌ இன்ன‌மும் இந்த‌ அர‌சு ஏற்காம‌ல் ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பில் போட்டுவிட்டு த‌ப்பிக்க‌ முனைகிற‌து. இத்த‌கைய‌ கோழை ஆட்சியை மீண்டும் கொண்டு வ‌ந்தால் இதே நிலைதான் ச‌மூக‌த்துக்கு ஏற்ப‌டும்.

7 கருத்துரைகள்:

உலமா அவர்களே இன்னுமா புரியவில்லை? மஹிந்தவை எதிர்க்கவில்லை அவருடன் கூடியிருக்கும் இனவாத கும்பலை எதிர்க்கிறோம்.சந்திரிக்காவின் காலத்தில் ஆர்ப்பாட்டம் செய்த ஜேவிவி க்கு அப்போது தலைமை தாங்கியவர் வேறு பெயரில் ஒரு கட்சியின் தலைவராக இப்போது மஹிந்த பக்கம் உள்ளார் அதை நீங்கள்தான் மறந்து விட்டீர்கள்.இன்னும் பல இனவாதிகலும்,கிழக்கில் ஊர்களில்,பள்ளிகளில் கொலை செய்த ஆயுத கும்பலின் தலைவனும் உள்ளார் உங்கலுக்குத்தான் ஜாபக மறதி அதிகம்.மீண்டும் கவனமாக பழைய பத்திரிக்கைகலை வாசியுங்கள்.எனவே முதலில் மஹிந்த அந்த இனவாத கும்பலை விரட்டப் வேண்டும்.அண்மையில் புத்தளம்,குருநாகல் பிரதேசங்களில் அப்பாவி மக்களுக்கு எதிராக இன வெறியாட்டம் ஆடிய கும்பலை வழி நடத்திய பாடகரை நீங்கள் மறந்து விட்டீர்களா? அவரும் அவரின் தலைவரும் எங்கே இப்போது உள்ளனர்? உங்களுக்குத்தான் மிகப் பெரும் மறதி நோய் உள்ளது உலமாவே.

இவருக்கு எப்பவோ நடந்தது ஞாபகம் இருக்கு. இடையில நடந்தது இனிமேல்தான் அறிவாராக்கும். யாரடா இவர்?

எல்லாம் தெரிந்த மேலாவி அவர்களே! ரணில் என்பது காய்ந்த பீபெட்டை,மஹிந்த என்பது சுடச்சுட உள்ள பீபெட்டை.இந்த இரண்டு நஜீஸ்களையும் விளங்கிக் கொள்ளாது அல்லது விளங்கிக் கொள்ள விரும்பாது சுடச்சுட பீபெட்டைக்கு நீ்ர் ஏன் முஸ்லிம்களின் பெயரால் வக்காளத்து வாங்குகின்றீர் என்பது தான் இங்குள்ள வாசகர்களின் கேள்வி. உமது முகத்தைப் இங்கு பார்க்கும் போது வாசகர்களுக்கு ஓர் உண்மை தௌிவாகத் தெரிகிறது. அந்த உண்மையை ஏனைய வாசகர்களும் எம்முடன் பகிர்ந்து கொள்வார்கள். உலமாக்கட்சி என்று முஸ்லிம் சமூகத்தின் பெயரைப் பலிகொடுக்காது உமது வழமையான கஞ்சாத் தொழிலைச் செய்து வந்தால் நீர் அரசியல் செய்வதால் வரும் ஆபத்துக்களைவிட அது குறைவாகத்தான் இருக்கும்.

Jafnamuslim iwara periya manithana aakkittu...ok unmayya sollappona iwaru periya mahaa nadihanndu nenappu...
Thambiy nee enna ulama...
Waaya potthitu nee podura waakka podu...bt athu sellupadi illatha waakkuthhaan nichayam
.....allahukkaaha un waaya potthitu wera welayya paaruppa

மகிந்த ஆட்சிக்காலத்தில் நீர் ”கோமா”வில் இருந்தீரா?

Post a comment