Header Ads



இந்நாட்டில் இனிமேல் ஷஹ்ரான்கள், உருவாக விடமாட்டோம் - பொன்சேகா

- பாறுக் ஷிஹான் -

 ஒன்றிணைந்த புதிய ஜனநாயக தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் சனிக்கிழமை(9) இரவு கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா உரையாற்றும் போது,

அலுகோசுகளில் ஒருவரே சனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார்.  2015 வெற்றிக்காக நீங்கள் அளித்த ஆதரவை போன்று   வரும் சனாதிபதி தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும்.அதற்கு முன்பு மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில்  நரகத்தில் வாழ்ந்தோம் அதை போன்ற உணர்விலே இருந்தோம்   . அவரை சுற்றியிருந்தவர்கள் அலுகோசிகள் அவர்களில் ஒரு அலுகோசுதான்   சனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார்.2015 ஆண்டு அவரது மெதமுல்லையில் அவரை தோற்கடித்து சன்னலில் தொங்க வைத்தோம் அதையே மீண்டும் செய்வோம். 

 வெள்ளை வேன் கலாச்சாரம் எமது ஆட்சிக்காலத்தில் தான் ஒழிக்கப்பட்டது மஹிந்தவின் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு தூதர்கள் யாரும் அவர்களை சந்திக்க சந்திக்க விரும்பவில்லை . அவர்கள் சமாதானத்தை விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம்.

லிபியாவில்  சர்வாதிகாரியாக கடாபியை மகிந்த ராஜபக்ச சந்தித்து வந்தபின்னர் அந்த நாட்டு மக்களே  புரட்சி செய்து கொன்றனர். அதே போன்றே மஹிந்த அரசியல் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்டார்.

தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக  ஏற்பட்ட கலவரம் கோட்டாபய ராஜபக்ச விருப்பத்திற்காக மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் ஒரு யுத்தத்தை இந்த நாட்டு மக்கள்  விரும்பவில்லை . ஒரு நாட்டிற்குள் இன்னோரு இனம் இரண்டாம் குடி மக்களாக வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை.மொட்டு கட்சிக்குள் இருப்பவர்களின் கை சுத்தமில்லாமல் இருக்கின்றனர்  அவர்கள் ராஜாவாக இருக்க விரும்புகின்றனர்.

சஜித் பிரேமதாஸ    சனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில்  எமக்குள் சிக்கல்கள் இருந்த போதும் நாங்கள் பேசி முடிவெடுத்தோம் மகிந்த குடும்பம் அவ்வாறில்லை.அண்ணன் சொல்வார் அனைவரும் ஏற்க வேண்டும் .சஜித் பிரேமதாச என்னை பாதுகாப்பு செயலாளராக நியமிப்பதாக உறுதி வழங்கியுள்ளார். அவ்வாறான நல்ல மனிதர் சஜித் பிரேமதாச என்பதை கூறிக்கொள்ள விரும்ப விரும்புகிறேன். மீண்டும் ஒரு யுத்தம் இந்த நாட்டில் இடம்பெற விடமாட்டோம்  .  ஷஹ்ரான்கள் உருவாகவும் விடமாட்டோம் . அவர்களை ஆதரிப்போரையும் கண்காணித்து நல்வழிக்கு கொண்டு வருவோம்.

தண்ணீர் கேட்ட மக்களை சுட்டு கொன்றவர் கோட்டாபய ராஜபக்ச இன்று இரவில் தூங்க முடியாது  தவிக்கிறார் .  சுட்டவர் சிறையில் இருக்கிறார் சுட சொன்ன வெளியில் சனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார். 1000 மேல் லெப்டினன் ஜெனரல்  ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்கள் அனைவரையும் சனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியுமா?  என கேள்வியெழுப்பினார்.  


2 comments:

  1. Well done Mr. Sarath Fonseka. After your assumption of duties, your first responsibility is that to crash any Zahrans, and bring to good path if any follower found.

    ReplyDelete
  2. Your determination to stop future Zahrans is commendable. Are you going to stop only future Zahrans or future Prabakarans and Gnanasaras too?

    ReplyDelete

Powered by Blogger.