Header Ads



கோட்டாபயவை ஏன், அதாவுல்லா ஆதரிக்கிறார் தெரியுமா..?

இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்றுவிக்கும் சர்வதேச சக்திகளின் தலையீட்டிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவே தேசிய காங்கிரஸ்  கோட்டாபயவை ஆதரிக்கின்றது என முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

கோட்டாபயவை ஆதரித்து  பாலமுனையில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் கட்சி இளைஞர்களுடனான கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள அரசியல் தீர்மானங்களும் முடிவுகளும் இந்த நாட்டின் எதிர்கால சுபீட்சத்தை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டதாகும்.

கடந்த காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட போதும் தேசிய காங்கிரஸ் கட்சி அவரை ஆதரித்தது அதில் வெற்றிபெற்றது. அந்த தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய காங்கிரஸ் கட்சி முன்வைத்த கோரிக்கையை எமது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்தனர்.

நாங்கள் அப்போது முன்வைத்த கோரிக்கையை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் நிறைவேற்றித் தந்தார். அன்று எமது கட்சி எடுத்த தீர்மானத்தை பிழை என்று கூறியவர்கள் பின்னர் அதனை சரிகண்டனர்.  எமது முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களின் இன்றய நிலை காலம் கடந்த ஞானம் போன்றதாகும். சமூகத்துக்கு பயனளிக்கக் கூடிய வகையில் எமது கட்சி எடுக்கின்ற அரசியல் தீர்மானங்களையும் முடிவுகளையும் விமர்சிப்பது அவர்களுக்கு தொடர் கதையாக மாறிவிட்டது.

பாதுகாப்பான நாடொன்றை கட்டியெழுப்பக் கூடிய தகுதியும் தராதரமும் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும் என்றார். 

3 comments:

  1. நல்லா வாயில வந்துடப்போகுது - ஓடிப்போ கூலிக்கு மாரடிக்கும் கோமாலியே
    உன் சுயநலத்தின் வெளிப்பாடு உனக்கு தெரியுதோ இல்லியோ இந்நாட்டு அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியும்- சுயநலவாதியே
    மர்சூக் மன்சூர்- தோப்பூர்

    ReplyDelete
  2. நீங்கள் ஒரு அமைச்சராக அல்லது MP யாக இல்லாமல் சாதாரண மகனாக இருந்தால் விளங்கும் அவரது முகங்கள்.

    ReplyDelete
  3. We don't expect u became so low to protect a family rule..u are also the same wanting to protect your family.sone apt people may be supporting you for the services and not for your political wisdom.afte all what wisdom u had and have apart from dividing people by area-wide.

    ReplyDelete

Powered by Blogger.