Header Ads



கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி, மன்னிப்பளித்தது துன்பகரமான செயலாகும் - அநுர

ரோயல் பார்க் கொலை சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபரை ஜனாதிபதி ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது என்பது  ஒரு துன்பகரமான செயலாகும் என்பதோடு ஒரு பிழையான முன்மாதிரியாகும் என ஜே.வி.பியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் இதற்காக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மீது கடுமையான கண்டனத்தை  தெரிவித்துகொள்கின்றோம். நீதிமன்றத்தால் முறையான விசாரணைக்கு பின்னர் தண்டனை  விதிக்கப்பட்ட நபரை நாட்டின் ஜனாதிபதியால் ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது என்பது  ஒரு துன்பகரமான செயலாகும். இது சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றைக் கேள்வி குறியாக்கியுள்ளது.

பண  ஆட்சியின் செல்வாக்கு காரணமாக   அடிப்படை ஜனநாயக  கொள்கைகளை  சவாலுக்குட்படுத்தும் அழிவுகரமான  ஊழல் நிறைந்த ஆட்சியின் விளைவை அனுபவித்து வருகிறோம். இலங்கை வரலாற்றில் கொலை குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது இது முதல் முறை அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.