Header Ads



இலங்கையினை சிங்கள நாடாக கொண்டுவருவோம் என கோத்தபாயவினர் கூறிவருகின்றார்கள்

சிறுபான்மை மக்கள் தங்களது இருப்பையும், உரிமையையும் பாதுகாப்பதற்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆதரித்து வாழைச்சேனையில் நேற்றிரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

இலங்கையினை சிங்கள வாதம் கொண்ட நாடாக கொண்டு வருவோம் என்று கோத்தபாயவினர் கூறிக் கொண்டு வருகின்றார்கள். இவர்கள் எங்களை மியன்மார் போன்று துவம்சம் செய்து விடுவார்கள். எனவே, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுபான்மை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

சஹ்ரான் கோத்தபாயவின் நேரடி ஒப்பந்தகாரர். அவரை பயன்படுத்தி நாசகார வேலைகளை செய்தார். இது ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கிய நாடகம். குண்டைவெடிக்க வைத்து விட்டு நான் தான் ஜனாதிபதி வேட்பாளர், என்னால் மாத்திரம் நாட்டை பாதுகாக்க முடியும் என்று கூறுகின்றார்.

சிறுபான்மை மக்கள் தங்களது இருப்பையும், உரிமையையும் பாதுகாக்க சிந்தித்து வாக்களிக்க வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளோம். எனவே, அனைவரும் அன்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கு ஒன்றிணைய வேண்டும்.

அத்தோடு வாழைச்சேனை துறைமுகத்தினை நவீனமயப்படுத்துமாறும், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை தரமுயர்த்துமாறும், ஓட்டமாவடி அமீர் அலி மைதானம் மற்றும் வாழைச்சேனை பொதுமைதானத்தினை நவீன முறையில் அமைத்து தருமாறு இந்த இடத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.