Header Ads



என் மீது நம்பிக்கை வையுங்கள், மக்கள் வழங்கும் பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவேன்

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அடிபணிந்து அவர்களின் நிபந்தனைகளை நிறைவேற்றிய ரணில் அரசாங்கத்தால் மக்களை பாதுகாக்க முடியாதுபோய்விட்டதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது உரையாற்றிய வேளையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தத்தை நிறைவு செய்ய எங்களால் முடிந்தது. அந்த யுத்தத்தை நிறைவு செய்து வேகமான அபிவிருத்தியை முன்னெடுத்தோம்.

எனினும், கடந்த தேசிய பாதுகாப்புக்கோ, பொதுமக்களின் பாதுகாப்புக்கோ எத்தகைய முனைப்பான நடவடிக்கைகளையும் கடந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

அது தொடர்பான போதிய தெளிவும் புரிந்துணர்வையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அடிபணிந்து அவர்களின் நிபந்தனைகளை நிறைவேற்றிய அரசாங்கத்தால் இந்த மக்களை பாதுகாக்க முடியாதுபோனது.

தேர்தல் வெற்றியின் முதலாவதாக பொதுமக்களின் பாதுகாப்பையே உறுதிப்படுத்தவுள்ளோம். நாங்கள் ஸ்தாபிக்கும் அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கும்.

எந்தவித பயங்கரவாதத்தினையும் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என நான் உறுதியளிக்கின்றேன். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, பாதுகாப்பை உறுதிப்படுத்த தெளிவான வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

என் மீது நம்பிக்கை வையுங்கள். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றியவன் நான். எதிர்காலத்தில் பொதுமக்களால் எனக்கு வழங்கப்படும் பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவேன் என்றார்.

5 comments:

  1. நம்பி நம்பிக்கை வைத்து ஏமாந்தது போதாதா மன்னா - மர்சூக் மன்சூர் - தோப்பூர்

    ReplyDelete
  2. நீங்கள் ஆட்சிக்கு வருவதற்காக எதையும் செய்வீர்கள் என்று நம்பிக்கை வைக்கலாம்

    ReplyDelete
  3. நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை இந்த உறவு எதற்கு போடி.

    ReplyDelete
  4. இது உயிர் பிரியும் தறுவாயில் இறைவனோடு பேசுவதைப் போல் உள்ளது.

    ReplyDelete
  5. நீங்கள் பேசுவதை கேட்கும் பொது மிக அருவருப்பாக இருக்குது. உங்கள் குடும்பமே நெகளுக்கு எதிரி தான்.

    ReplyDelete

Powered by Blogger.