Header Ads



நடந்ததற்கு வெட்கப்படுகிறேன், நான் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் - ஜயமஹா உருக்கம்

நடந்ததற்கு வெட்கப்படுகிறேன், நான் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், என்று பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மரண தண்டனை குற்றவாளி ஜயமஹா தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டில் ஸ்வீடிஷ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் யுவோன் ஜோன்சனைக் கொலை செய்த குற்றத்திற்காக இலங்கையரான ஜயமஹாவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி மரணதண்டனை தீர்ப்பிலிருந்து விடுவிப்பதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த முடிவுக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வெளிப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஜயமஹா நாட்டு மக்கள் மற்றும் ஜோன்சன் குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில் அவர்,

நடந்த சம்பவத்திற்கு வெட்கப்படுகிறேன். இந்த 15 ஆண்டுகளில் அனைவருக்கும் சோகம், இழப்பு மற்றும் வருத்தம் மட்டுமே எஞ்சியுள்ளது.

யுவோனை என்னால் மீண்டும் கொண்டுவர முடியாது. நீங்கள் இப்போது என்னை நம்பவில்லை என்றாலும், நான் தொடர்ந்து திருத்தங்களைச் செய்வேன்.

19 வயதில் கொலைச் செய்திருந்தாலும் இப்போது 34 வயதில் மாற்றப்பட்ட புதிய மனிதராக மாறிவிட்டேன்.

உங்கள் கோபம் எனக்கு புரிகிறது. ஆனால், தயவுசெய்து நான் இன்று என்ன, என் வாழ்க்கையை என்ன செய்ய முயற்சிக்கிறேன் என்று எனக்கு தீர்ப்பளியுங்கள் என்று அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜயமஹா லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்துவிட்டதாகவும், தற்போது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 comments:

  1. You were a drug addict and a murderer.even if you apologize 1 million times you should not have been pardoned.what is the purpose o appeal court and supreme court if you are left out

    ReplyDelete
  2. தான் செய்த குற்றத்துக்கு குறைந்த பட்சம் கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்கும் அளவுக்காவது இந்த கொலைகாரனிடம் மனசு கிடையாது.எந்தவகையிலும் இவன் மன்னிப்பு வழங்கப் பொறுத்தமற்றவன் என்பதை செயலில் காட்டிவிட்டான். பெரிய சைத்தானுக்கு மன்னிக்கும் அதிகாரம் கொடுத்த சட்டம் உடனடியாக மாற்றியடைக்கப்படவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.