November 30, 2019

பிரபாகரன் தமிழர்களை திரட்டியதை போல, முஸ்லிம்கள் ஒன்றுபடவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது - ஹரீஸ் அழைப்பு


- பாறுக் ஷிஹான் -

வடக்கில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று  பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் சமகால அரசியல் சம்மந்தமான கலந்துரையாடலும் சனிக்கிழமை (30) சாய்ந்தமருது,  மாளிகைக்காடு பிரதேசதில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வின் போது உரையற்றிய  பாராளுமன்ற உருப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறும் போது

 நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச சக்திகளின் தலையீடு இருந்தது என்ற விடயம் எல்லோருக்கும் தெரிந்தது, அதிலும் இந்தியாவின் தலையீடு அதிகமாக இருந்ததை இந்த இடத்தில் கூறியாக வேண்டும், குறிப்பாக இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றிக்கான காரணம் இலங்கையில் ஸஹ்ரான் என்ற பைத்தியம் மேற்கொண்ட  ஈஸ்டர் தாக்குதலையும், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களையே கடந்த தேர்தலில்  பிரச்சாரம் செய்திருந்தார், சஹ்ரன் குழுவினரின் அடுத்த இலக்கு தமிழ் நாடு என்றும் கருத்துக்களை முன்வைத்தனர். மோடி பிரதமரானதும் முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்தார், குறிப்பாக பாபர் மஸ்ஜித் இடிக்கப்ப்ட வேண்டும் என்றும் அதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதே போன்ற நிலை இலங்கையிலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் காஸ்மீர் இன்று லடக் என்றும் ஜம்மு என்றும் பிரியப்பட்டுள்ளது இதைப்போன்றுதான் கோடீஸ்வரனும் , மாநகரசபை உறுப்பினர் ராஜன் போன்றோர் கல்முனையை கூறு போட துடிக்கின்றனர். இலங்கையின் நில அமைப்பில் கிழக்கு மாகாணத்தின் அமைப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இங்குள்ள முஸ்லிம் மக்களின் வர்தகம், கல்வி ,கலாச்சாரம் ,அரசியல் என்பவற்றின் இருப்பை கேள்விக்குறியாக்கி இல்லாமல் ஆக்குவதற்கு வல்லரசான இந்தியா முழுமையாக செயற்படுகின்றது. குறிப்பாக ஏழு,எட்டு வருடங்களுக்கு முன்னதாகவே இந்தியாவின் உளவுத்துறையினர் கிழக்கு இலங்கையில் கால்பதித்துவிட்டனர். வடக்கில் தமிழ் மக்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அவர்களை கட்டாயம் இந்தியா பாதுகாக்கும் .

அண்மையில் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் அத்துலுகிரிய ரத்ன தேரர் அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக மெர்கொண்ட உண்ணாவிரதமானது மீண்டும் ஒரு கருப்பு ஜூலை கலவரத்தை உருவாக்க முயன்றுள்ளார். இன்னும் சில மாதங்களில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முஸ்லிம்களின் இருப்பு சம்பந்தமான விடயம் இன்னும் கேள்விக்குறியாகாவே உள்ளது. முஸ்லிம் மக்கள் இன்று  சிங்கள மக்கள் மத்தியில் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். 

நடைபெற்று முடிந்த சனாதிபதி  தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ இன்று கடனாளியாக மாறி விட்டார் . எனினும் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெற வைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டதைப்போன்று இன்று முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க கட்டாயம் ஒன்றுபட வேடிய நிலை காணப்படுகின்றது. வடக்கில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தந்தை செல்வநாயகம் போன்றோர் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம் மக்களும் வருகின்ற பொது தேற்தலில் கட்சி பேதங்கள் மறந்து ஒன்று பட்டு தமது இருப்பை பாதுகாக்க வேண்டும் என தனது கருத்தில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபையின் மேயர் எ.எம். றகீப்,  உப மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

11 கருத்துரைகள்:

முஸ்லிம்கள் ஒன்று பட்டால்
பலனடைவது முஸ்லிம் அரசியல்வாதிகளே சமூகமல்ல.
இனியாவது உணரவேண்டும்.

முட்டாள் தனமான கருத்து

You are correct. They all cheat the community.

இம்முறை முஸ்லிம்களை ஒன்று படுத்துவதாகக் கூறி என்ன மயிரைப் பிடுங்கிநீர்கள்? சமூகத்தை நடுரோட்டில் விட்டுள்ளீர்கள். வெட்கம் கெட்ட தலைவர்கள்.

Foolish politician fueling the fire for thier own agenda

இருக்வே இருக்கு ?auff Hakeem

Dear Brother Harees,
You WERE very WRONG when you said that:
"அதுபோல் 2010ம் ஆண்டும் அவரை தோற்கடித்தோம".
In 2010, Mahinda Rajapaksa WON the Presidential Elections with 20% of the Muslim Vote Bank, especially in the Eastern province voting him.
On November 16th, 2019, HE Gotabaya Rajapaksa won with around 300,000 Muslim voters all island voting him, Alhamdulillah.
What you have said is good and your guesture is welcome. It is now the correct time for young Muslim politicians like you in the Eastern province to support a Muslim personality placed by the blessings of God AllMighty Allah, in the centre of the HE.President Gotabaya Rajapaksa/Hon. PM. Mahinda Rajapaksa new government and come forward to launch a political campaign in the Eastern province and Muslim populated areas to bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". It has been spoken about this news culture in the media too. It should be a culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians. This political force can then support the new government to be formed in 2020 with our Muslim representatives, as partners, Insha Allah.
The need is to immediately call a "meeting for Unity" of all Muslim progressive and or others to gather together under a common leadership of a "CONVENER", to achive the above goals, Insha Allah, Alhamdulillah. I am sure that many Muslims, especially the Youth will join you in this mission. "The Muslim Voice" is willing to be a partner with you in the new political journey, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

சபாஷ். அருருருருருமையான கருத்து. பாராட்டப்பட வேண்டிய கருத்து. நிச்சயமாக இரண்டு விடயங்களைத் திறம்படச் செய்வதற்காக முஸ்லிம்கள் ஒன்றுபடவேண்டும். இது காலத்தின் மிகக் கட்டாய தேவையாக இருக்கின்றது. முதலாவது கிழக்கு மாகாணத்தின் சகல அபிவிருத்திகளையும் திறம்பட விழிப்புணர்வுடன் செய்யக்கூடிய ஒரு முஸ்லிம் தலைமையைத் தேர்வு செய்ய ஒன்றுபடல் வேண்டும். அடுத்து தற்போது இருக்கும் முஸ்லிம் MP க்களை காட்டிற்கு அனுப்ப ஒன்றுபடல்; வேண்டும். தவிர நாங்கள் தற்போது இருக்கும் கிழக்கு முஸ்லிம் MP க்களை தெரிவு செய்வதாக இருந்தால் ஒற்றுமைப்படாமல் இருப்பதே சாலவும் சிறந்தது.

Muslimhal ontru paduwadu mattum payan kidaiyaadu moovina makkalum ontru pattu vaala enna vali seiia wendum entru sindiththal mattume payanullataha irukkum.naam muslimhal maathiram thanithu nindu otrumaiyai kaatuvadu thuwesathaiye etpaduthum

People should think positively.... Negative minded will keep no use to us

This Joker does not have ministry post now.
So crying and started to cheat people again

Post a comment