Header Ads



சந்திரிக்காவுக்கு மக்கள் பதிலளித்துள்ளனர் - தயாசிறி

தனக்கு எதிராக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் கட்சியின் செயலாளர் என்ற வகையில் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு அமைய எதிர்காலத்திலும் செயற்பட போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் இன்று -20- நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியின் ஆலோசகர் பதவியை வகித்துக்கொண்டு கட்சியின் கொள்கையை புறந்தள்ளி விட்டு எதிரணியில் இருந்து செயற்பட்டார். எனினும் அவருக்கு மக்கள் பதிலளித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என் மீது எப்படியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அவற்றை நான் பொருட்படுத்த மாட்டேன்.

சில ஊடகங்கள் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தமாக வடக்கில் தமிழ் மக்கள் மத்தியில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டன. எதிரணியினர் மிகவும் மோசமான வகையில் சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்டன. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தற்போது சம்பிரதாயபூர்வமற்ற தலைவர் ஒருவரின் ஆட்சியின் கீழ் நாடு வந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கடமையாயை சரியாக செய்வார். இதற்கு அமைய அவருடன் இணைந்து புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.