Header Ads



கல்முனை BCAS (பீகாஸ்) உயர்கல்வி வளாகத்தினால் இலவச செயலமர்வு


கல்முனை BCAS(பீகாஸ்) உயர்கல்வி  வளாகத்தினால்தொடர்சியாக இடம்பெற்றுவரும் இலவசசெயலமர்வின் அங்கமாக"உலகை கையாளுதல்" (ACCESS THE WORLD)எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கான செயலமர்வொன்று  அண்மையில் இடம்பெற்றது

BCAS கல்முனை வளாகத்தின் முகாமையாளர் பொறியியலாளர் என்.டி ஹமீட் அலி அவர்களின் தலைமையில் சம்மாந்துறை பிரதேசபை ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் சம்மாந்துறை 
மஜீட்மண்டபத்தில்  நடைபெற்றது.

இதன் போது சுய விபரக் கோவை ஒன்றை தயாரிப்பது எப்படி,இணையத்தின் மூலம் பணம்சம்பாதிப்பது எப்படி,நேர்முகப் பரீட்சை ஒன்றிக்கு எவ்வாறு வெற்றிகரமாக முகம்கொடுக்கும் படிமுறைவிளக்கங்கள் , தற்காலத்து கட்டிட நிர்மாணத்துறை தொழில்வாய்ப்புகள்,சுயதொழில்ஒன்றை எவ்வாறு மேற்கொள்வது பற்றி  பல்வேறுதலைப்புக்களிலும் 
துறைசார்ந்த விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

சுமார் 100 மாணவர்கள் பங்குபற்றிய இச்செயலமர்வில் இறுதியாக சான்றிதழ் வழங்கும் வைபவம் கல்முனை BCAS வளாகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.