Header Ads



4 கேள்விகளை முன்வைத்து மகிந்தவுக்கு, சஜித் அனுப்பியுள்ள கடிதம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தன்னுடன் விவாதத்திற்கு வரவில்லை என்பதால், தன்னிடம் உள்ள கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்ச பதிலளிக்க வேண்டும் என சஜித் பிரேமதாச கடிதத்தில் கூறியுள்ளார்.

சஜித் தனது கடிதத்தில் நான்கு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய உடன்பாடு என்ன?. எந்த அடிப்படையில் வரதராஜ பெருமாள், கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குகிறார்?. கருணா அம்மானுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடு என்ன?. எந்த காரணத்திற்காக இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லா ஏன் கோருகிறார்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார் எனவும் அரசியலமைப்புக்கு எதிரான சூழ்ச்சியில் , ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டின் சட்டத்தை காலால் மிதித்த அரசியல்வாதியின் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் உரைகளை கேட்பதை நிராகரிப்பதாகவும் சஜித் பிரேமதாச தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.