Header Ads



நாட்டில் 30 வீதமாக இருக்கும் சிறுபான்மையினரில் 28 வீதம் சஜித்திற்கு வாக்களிக்கவுள்ளனர்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் முப்பது வீதமாக இருக்கும் சிறுபான்மை மக்களில் 28 வீதம் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிக்கவுள்ளனர். மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளைவிட அதிகப்படியான வாக்குகளால் சஜித் வெற்றிபெறுவது உறுதியாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று -13- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இடம்பெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை நாட்டு பிரஜை அல்லாத ஒரு வேட்பாளர் போட்டியிடுகின்றார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் பிரஜா உரிமை தொடர்பான பிரச்சினை அவர் வேட்புமனு தாக்கல் செய்த நாள்முதல் இருந்துவருகின்றது. இதுவரை அதனை உறுதிசெய்யவில்லை என்பதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கூற்றின் மூலம் தற்போது உறுதியாகி இருக்கின்றது.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக குற்றச்சாட்டுக்களுக்காக நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட வேட்பாளராகவே கோத்தாபய ராஜபக்ஷ திகழ்கின்றார். 

கடந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட கடமைகளை அவர் சரியாக நிறைவேற்றி இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். கோத்தாபய ராஜபக்ஷ நாட்டுக்கு செய்ய சேவையாக மக்கள் அறிந்திருப்பது, அவர் ஆட்களை ஏவி, கொலை, கொள்ளை மற்றும் வெள்ளை வேனில் ஆள் கடத்திய விடயங்களாகும். 

அத்துடன் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொண்டவராவார். 

அப்படிப்பட்ட ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்பதை மக்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றனர். 

அதனால் நாடில் இருக்கும் 30வீத சிறுபான்மை மக்களில் 28 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. 

நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை சஜித் பிரேமதாசவினால் மாத்திரமே ஏற்படுத்த முடியும். அதுதொடர்பான வேலைத்திட்டங்களையும் அவர் முன்வைத்திருக்கின்றார் என அவர்  இதன்போது தெரிவித்தார்.

2 comments:

  1. "The Muslim Voice" according to a Research Study done has predicted that the 38% of the Muslim Vote bank will vote Gotabaya on November 16th., 2019, Insha Allah.
    Azad Sally is a “DESCEPTIVE” and DISHONEST LYING MUSLIM POLITICIAN. In the Bathiya Mosque matter, the Hijab matter and all other Mosque matters and the Halal issues, Azad Sally made many press statements and bluffed the Batiya Mosque Jamath and the Muslims lock - stock and barrel, as the other “DECEPTIVE” Muslim politicians did. Nothing has happened so far, as “The Muslim Voice” warned the community regarding these unscrupulous Muslim politicians. Azad Sally is NOT a respectable person as his own involvementwith the Police in Kandy and Colombo shows . Azad Sally was a Member of the Central Provincial Council till he resigned in March 2016. He was a UNP CPC member. Azad Sally has been a loud mouthed Muslim Politician who was very corrupt during the time when he made political alligence with the Mahinda Rajapaksa government (Haj quota scandals). One of Azad Sally's political deceptions is to make "big noises" on issues concerning the Muslim community, but nothing happens at the end, other than the Muslim community being pushed into social and political turmoil and disaster. It is understood that he is now attached to the President's Office as an Advisor with perks. It is rumoured that his brother Ryaz Sally, appointed Chairman of the Cement Corporation by the Minister of Industries and Commerce Minister Rishad Bathiudeen has had very close connections with the Bodu Bala Sena and has revealed quite a lot of vital information of Muslim business persons, Travel Agents, Haj Group Operators and provided information about the financial status of the Muslim Community, which have become detrimental to our community in recent time, it is alleged. A New Political Force arising from within the Muslim Community, especially from among the Youth should "politically" reprimand these deceptive, dishonest and unscrupulous Muslim politician in any of the forthcoming elections, Insha Allah .These hypocritical politicians should be got rid of from our innocent community soon, Insha Allah. The Muslims should stand together and vote Gotabaya Rajapaksa to victory on November 16th., 2019, the Muslim vote bank will be happy that we were part of Gotabaya's victory as partners with the majority Sinhalese people and those that love our "MAATHRUBOOMIYA" Mother Sri Lanka and move towards Reconciliation, Peace and Harmony..
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  2. இவருக்கு கணக்கில் 0 ஆக்கும்.இலங்கையின் இன விகிதாச்சாரமும் தெரியாத பன்னாட.

    ReplyDelete

Powered by Blogger.