November 08, 2019

முதல் தெரிவை அநுராவுக்கும் 2 வது வாக்கை, சஜித்திற்கும் வழங்கினால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா..?

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப்பெறினும் நமது முதன்மை வாக்கினை அனுர குமார திசானாயக்கவுக்கு நாம் அளிப்பதே, நாட்டிற்கும் நமது சமூகத்திற்கும் பாதுகாப்பான, அறிவுபூர்வமான முடிவாகும். அத்தோடு நமது வாக்கின் பெறுமதியை  அதிகரிப்பதற்கான ஒரே ஒரு   தூரநோக்குடனான வழிமுறையும் அதுவே ஆகும்.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் வரலாறு காணாத வகையில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும், மக்களின் கவனத்தினை ஈர்த்த மூன்று வேட்பாளர்களே இன்று முன்னணி வேட்பாளர்வரிசையில் உள்ளனர். இம்மூன்று வேட்பாளர்களிலும் எமது முதல்தெரிவாக நாம் யாருக்கு வாக்களிப்பது என்பதனை மிகவும்  நிதானமாகவும்  தூரநோக்கு சிந்தனையுடன் நாம் மேற் கொண்டாக வேண்டும்.

சிறுபான்மை மக்கள் என்ற ரீதியிலும், கடந்தகால ஆட்சி அனுபவங்களின் அடிப்படையிலும் இதனை மிக ஆழமாகவும் சமயோசிதமாகவும் கையாள வேண்டிய பொறுப்பும் கடமையும் முஸ்லிம்களாகிய எமக்குள்ளது.

இலங்கை வரலாற்றில் ஒரு ஜனாதிபதித்தேர்தலானது இம்முறையே மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.  இதன் காரணமாக, போட்டியிடுகின்ற எந்த ஒரு வேட்பாளரும் முதல்சுற்றில் 50 வீதத்துக்கு அதிகமான வெற்றிபெறமுடியாத நிலை தோன்றியுள்ளது. இரண்டாம் சுற்று கணக்கெடுப்பில் கிடைக்கும் இரண்டாம் தெரிவு வாக்குகளின்  அடிப்படையிலேயே எவரும் வெல்ல முடியும். இது  சிறுபான்மை மக்களுக்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெறுமதியான ஒரு வாய்ப்பாகும். எனவேதான் நாம் வாக்களிக்கின்ற போது எம்மால் இரண்டு தெரிவுகளை வழங்கமுடியுமென்பதினை கவனத்திற்கொண்டு வாக்களித்தல் எமக்கு மிகப்பாதுகாப்பானதாக அமையும்.

இந்த இடத்தில் நாம் இம்மூன்று  வேட்பாளர்களின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில்  சிந்திக்க வேண்டிருக்கின்றது.இந்த நாட்டில் இனவாதத்தினையும் பாரிய ஊழல் மோசடிகளையும் ஆரம்பித்து வைத்தவர்கள் கோத்தாபாய அணியினரே  என்பது நம் அனைவருக்கும்  தெரியும். எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் கூட இவர்கள் இந்த இனவாதத்தை தமது அரசியலுக்காக வளர்த்து பயன்படுத்தினார்கள். அவர்கள் மீண்டுமொருமுறை ஆட்சிக்கு வருவதென்பது மிகப்பாதகமான ஒன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 இரண்டாவதாக சஜித் பிரேமதாச தொடர்பில் சிந்தித்தால், அவர்களும்  இதே இனவாத நடவடிக்கைகளை   தடுத்து நிறுத்தவோ தட்டிக்கேட்கவோ இவர்களும் முன்வரவில்லை.  முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகள் குறித்து மிகக்காட்டமாக பேசிவரும் சஜித் அணியினர் தங்களது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பாரிய ஊழல் மோசடிகள் குறித்து பேசவோ,அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ தாயாரில்லை. 

ஆனால் இதெற்கெல்லாம் மாற்றமாக ஆட்சி அதிகாரம் இல்லாமலேயே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இந்த இனவாதத்தினையும் ஊழல் மோசடியினையும் தைரியமாக  தட்டிக்கேட்ட ஒரே வேட்பாளர் அனுர குமார திசானாயக்க என்பதும் எமக்குத் தெரியும். இதனாலேயே இன்று எதிரணியினர் கூட அனுர குமார திசானாயக்க நேர்மையான மனிதர் என்பதனை ஒத்துக்கொண்டுள்ளனர். 

ஆயினும் நமது முதலாவது வாக்கினை  அனுர குமாரதிசானாயக்கவிற்கு வழங்குவது எப்படி எமக்கு பாதுகாப்பாக அமையும்? என சிலர் கேட்கின்றனர்.இந்த விடயத்தினை நாம் மிகத்தெளிவாக  விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாம் நமது முதலாவது வாக்கினை அனுர குமார திசானாயக்கவிற்கு வழங்குகிறோம் என வைத்துக்கொள்வோம்.

இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் மூன்று வகையான முடிவுகளே வரமுடியும்.

1. நாட்டுப்பற்றும்  சமூக அக்கறையும் கொண்ட  நம்பகமான வேட்பாளர் அனுர குமார திசானாயக்க வெற்றி பெற்று, ஜனாதிபதியாகிறார் என வைத்துக்கொள்வோம். இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை இது உண்மையில் மிகவும் சந்தோசமான சகல நாட்டு மக்களும்  திருப்தியுடன்  ஒரே தேசத்து மக்களாக  கொண்டாடக்கூடிய  ஒரு முடிவாக இது அமையும் . இந்த நாட்டில் கடந்த 70 வருட காலத்தில் எம்மால் பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கின்ற பல நல்ல விளைவுகளை இந்த முடிவு தரும்.

2. இத்தேர்தலில் சஜித் பிரேமதாஸ அவர்கள் வெற்றி பெறுகிறார் என வைத்துக் கொள்வோம்
 இதுவும் கூட நாம் ஆறுதல் படக்கூடிய, ஒப்பீட்டு ரீதியில்பாதகம் குறைந்த ஒரு முடிவே ஆகும். ஆயினும் கடந்த கால  அனுபவங்களை கருத்திற்கொண்டு நாம் சஜித் பிரேமதாசவிற்கு நமது முதலாவது தெரிவினை வழங்க முடியாதுள்ளது. அவருக்கு இரண்டாவது தெரிவினை வழங்குவதன் ஊடாக மட்டுமே  "சிறுபான்மை  மக்கள்  நிபந்தனையுடன் கூடிய வாக்கினையே நமக்கு அளித்துள்ளனர்" என்கிற எண்ணப்பாட்டினை அவருக்கு வழங்கமுடியும்.இதனால் சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில் ஒரு மிதமான, நடுநிலையான போக்கினை கையாள வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்படும். இது எமக்கான ஒரு பாதுகாப்பான இடைக்கால தீர்வாக அமையும். 

3. இறுதியாக நாம் எதிர்பாராத வகையில்  கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்று  விடுகிறார்  என்று வைத்துக்கொள்வோம். அப்போது சிறுபான்மை மக்களாகிய எமக்கு என்ன நேரும் என்கின்ற பயம் கலந்த கேள்வி நம் அனைவருக்குள்ளும் உள்ளது. 

அவ்வாறு ஒரு நிர்ப்பந்தமான நிலை வந்தாலும் கூட நாம் யாரும் நமது பிறந்த நாட்டை விட்டு வெளியேறவோ பிறநாடுகளில் தஞ்சம் புகவோ முடியாது. அந்த அபாயத்தினையும் நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். இவ்வாறான சூழலில் எமக்காக சஜித் குரல் கொடுப்பார் என நாம் எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் அவர் அவ்வாறு குரல் கொடுத்த எந்த வரலாறுகளும் கிடையாது. அதே போல எமது முஸ்லிம் தலைமைகளும் தங்களது பதவி பட்டங்களைத் துறந்து எமக்காக போராடுவார்கள் எனவும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் எப்படியேனும் கோத்தபாய அரசாங்கத்தின் கால்களைப் பிடித்தாயினும் தங்களது பதவி பட்டங்களை உறுதி செய்து கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

இப்படியானதொரு இக்கட்டான சூழலிலேயே நாம் அனுர குமார திசானாயக்கவிற்கு அளிக்கப்போகும் அந்த முதன்மையான வாக்கானது எமக்கு பாதுகாப்பானதாக அமையப்போகின்றது.கடந்த காலங்களைப் போலவே அப்பொழுதும் நமது சமூகத்திற்காக குரல் கொடுக்கின்ற ஒருவராக அனுரகுமாரவே இருக்கப் போகின்றார். எனவே அவரை முதன்மை வாக்கினை அளித்து நாம் பலப்படுத்த வேண்டியது எமக்கு கட்டாயமாகின்றது.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் எப்படியாக அமைந்த போதிலும் அனுரகுமார அவர்களுக்கு நமது 'முதல்' வாக்கினை வழங்குவதே பாதுகாப்பான அறிவுபூர்வமான தூரநோக்குடனான ஒரு முடிவாக அமையும் என்பதனை எவரும் மறுக்க முடியாது

 அதே வேளை அதி பாதகமான ஆட்சி ஒன்று அமைந்து விடாமல் தடுப்பதற்காக நாம் நமது இரண்டாவது தெரிவினை ஒப்பீட்டு ரீதியில் பாதகம் குறைந்த சஜித் பிரேமதாசவிற்கு வழங் முடியும். இதன் மூலம் அனுர -சஜித் இணைந்த ஒரு பலமான எதிரணியினை எம்மால் உருவாக்கவும் முடியும்.இதுவே கோத்தபாய ஜனாதிபதியானால் நாம் என்ன செய்வது என்கிற கேள்விக்கு பொருத்தமான விடையாகவும் அமைய முடியும்.

அழுத்கமை , திகனை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட பொழுது அதற்கான ஒருநாள் நாடாளுமன்ற விவாதத்தினைக் கோரி அந்த மக்களுக்காக குரல் கொடுத்தது அனுர குமார திசானயக்கதான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

டாக்டர் ஷாபி விடயத்திலும் 'இது நம்ப முடியாத பொய்' என பகிரங்கமாகக் கூறி அதனை இனவாதிகளின் குற்றச்சாட்டுகளை பிசுபிசுக்க செய்தவரும்  அனுர அவர்களே.

 21ம்திகதிய  குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் மக்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களின் போதும் நமக்காக குரல் கொடுத்த ஒரே நம்பகமான வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவே ஆகும்.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது அவர் ஆற்றிய உரை முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதாகவும் முஸ்லிம் சமூகம் மீதான நியாயங்களை உரத்துச் சொல்வதாகும் இருந்தது என்பதை மறந்து விடக்கூடாது.

எனவே எமது மனட்சாட்சியின் அடிப்படையில் எமது முதன்மைத்தெரிவினை அனுர குமாரவிற்கு வழங்குவதுடன் இரண்டாவது தெரிவினை சஜித்திற்கு வழங்கி இந்த நாட்டை எதிர்நோக்கி இருக்கும் உடனடி அபாயத்தை  தவிர்த்து நீண்ட காலத் தீர்வுகான அத்திவாரத்தை உறுதியாக இடுவோம்.

             முஹம்மத் அன்ஸார்

13 கருத்துரைகள்:

yes very very true
so all muslim should vote to anura kumara and 2nd vote for sajith
1 வது vote அனுரா குமார
2 வது vote சஜித்

கட்டுரையாளர் சொல்லுவது உண்மைதான். இருந்தபோதிலும் நாம் முட்டாள்தனமாக ஒரு முடிவை தெரிந்து தெரிந்து எடுக்கக்கூடாது. முதலாவது ஓட்டை அனுர குமார கொடுத்தால் கோட்டாபய இலகுவாக வெற்றி பெறுவார்.

ஜனாதிபதி தேர்தல் முறையை நோக்குமிடத்து.

அனைவரும் 50 வீதத்திற்கும் குறைவாக எடுத்தால் அதில் கூடுதலாக அடுத்த இருவரை மட்டும் தெரிவு செய்வர்.

இதில் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் அனுர குமாரா வுக்கு வழங்கினார் கோத்தாபய முன்னிலை வைப்பார்.


இவ்வாறான ஒரு நிலையில் கூடுதலான வாக்குகள் அடுத்த இருவரையும் மட்டும் தெரிவு செய்து அடுத்தவர்களை தள்ளுபடி செய்கின்றனர்.

இங்கு இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் அடுத்த வேட்பாளர்களுக்கு முதல் விருப்பு வாக்கை அளித்துவிட்டு இரண்டாவது விருப்பு வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்று எண்ணப்படும்.

எனவே முஸ்லிம்களின் முதல் விருப்பு வாக்கு சத்துக்கு கிடைக்காவிட்டால் அவர் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும். இது கோட்டாவின் வெற்றியை இலகுவாக்கும்.

ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா சொல்லுவது போல் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் இது அஜித்துக்கு கிடைக்காமல் போனால் அடுத்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அனுர குமார ஒருபோதும் இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவர் அதிக பட்சம் 10% வாக்குகளை முஸ்லிம்களையும் சேர்த்து எடுக்க வாய்ப்புள்ளது.

ஆகவே இந்த இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு அளிக்க வேண்டும் என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.

முஸ்லிம்கள் அனுர குமார வுக்கு வாக்களிப்பது நாம் விரும்பியோ விரும்பாமலோ கோத்தாவுக்கு வாக்களிப்பது போலாகிவிடும்.

அவருக்கு முஸ்லிம்கள் அனைவரும் இரண்டாவது விருப்பு வாக்கை அளிப்பதில் எந்த வித குறையும் இல்லை.

பொதுத் தேர்தலில் ஜேவிபி வாக்களித்தாலும் எந்தவித ஆபத்தும் இல்லை.

நன்றியுணர்வும் புத்திசாலித்தனமும் தூர நோக்கு சிந்தனையும் முஸ்லிம்களிடம் இருந்தால் நிச்சயமாக முதல் வாக்கை அனுர குமாரவுக்கும் இரண்டாவது வாக்கை ஸஜித்துக்கும் வழங்குவர்

இந்த ஆக்கத்தை பார்த்துவிட்டு சரி இதன்படியே நடப்போம் என்று இருந்துவிடாது ஏனையவர்களுக்கும் இதன் உண்மை தன்மையை விளக்குவோம்., நான் அ இ ம கா உறுப்பினராக இருப்பினும் இன்ஷா அல்லாஹ் அனுர வுக்கு முதல் வாக்கை அளிக்க எண்ணியுள்ளேன் (ஏற்கனவே பலரிடம் சொல்லியும் வருகிறேன்)

நல்ல கருத்து.ஆயினும் சஜித் முதலாவது சுற்றில் 50%+1 என்பதை நெருங்கியிருக்கும் நிலை ஏற்படுமிடத்து இது ஒரு அனாவசிய riskகாக அமைந்த்துவிடுமல்லவா?

Don't mislead Muslim community, JVP says they will change The Muslim Marriage Law and stablish a common law. If you are a Muslim you must not to support any one who cancel Muslim law. Only Munafik will vote JVP. Jaffnamuslim site owner you vote no problem but don't let others to join with you.

Don't mislead Muslim community, JVP says they will change The Muslim Marriage Law and stablish a common law. If you are a Muslim you must not to support any one who cancel Muslim law. Only Munafik will vote JVP. Jaffnamuslim site owner you vote no problem but don't let others to join with you.

JVP yinarin Muslim patriya nilaippadai vilanguvom. April taakudaluku pin avarahal veliyitta arikkayil 1. இன, மதம் சார்ந்த தனியார் சட்டங்கள் நீக்கம் செய்து பொது சட்டம் கொண்டு வர வேண்டும். 2. முஸ்லிம் சட்டம், மற்றும் ஏனைய தனியார் திருமணம் சட்டங்கள் நீக்கம் செய்து பொது சட்டம் கொண்டு வர வேண்டும். 3. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்திற்கு சட்டத்தில் இருக்கும் தளர்வை இல்லாமல் ஆக்கல். 4. முகம் மறைத்து ஆடை அணிவதை தடை செய்ய வேண்டும்... இது அவர்களின் official website il ebooks pahudiyil ulladu. Innum pala vidayangal idu pol ulladu. Adai vaasitu vittu mudivuku varavum.

Communists naaduhalana China, Cuba pandra naaduhalana ninaikum podu yosika veikindardu. Angu mada urimaihal valanga paduvadu Illai. Eg:adaan solludal, nonbu pidital. JVP yum Communists taane.

DAY UTTER FOOL HOW ANOORA WILL COME AS PRESIDENT YOU ARE WASTING YOUR VOTE IN OTHER SIDE YOU ARE SUPPORTING TO RAJAPAKSA

அன்னத்திற்கு மாத்திரம் புள்ளி இடுவேம்

don't mind this foolish report, this agent work for a private agenda...
the writer doesn't know what is the communists' policy? doesn't he know what JVP did in Ampara against Muslims including today's candidate? there a big number of parliamentarians who spoke for Muslims in previous tense situations. like Hon Mangala, Rajitha, Sritharan, Douglas and so....

Don't do like this betrayal against your own society for a cheap national list for your Hippocratic NFGG, it is also day dream you are dreaming.

Post a comment