Header Ads



20 குற்றச்சாட்டுக்களின் கீழ், றிசாத்தை கைதுசெய்ய கோரிக்கை - டான் பிரசாத்தும், சுதந்த தேரரும் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுக்களின் கீழ் புதிய சிங்களே தேசிய அமைப்பு இன்றைய தினமும் முறைப்பாடு செய்துள்ளது.

இன்றைய தினம் காவற்துறை தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

இதேவேளை, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் முந்தல் பகுதியில், பொதுமக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக பாதுகாப்பு கமராக்களில் காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில் ஏன் அவர் இன்னும்; கைது செய்யப்படாதுள்ளார் என புதிய சிங்கள ராவய அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

அதன் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொதுமக்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.

துரதிஷ்டவசமாக அந்த காட்சிகள் அனைத்தும் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

இல்லாவிடின், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர், நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது என்ற செய்தியை அவர் பரப்பியிருப்பார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையையும் அரசாங்கத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கிலே அவர் அவ்வாறான சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக அந்த பகுதியிலுள்ள மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் காயமமைடந்த இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேவைக்கு மேலதிகமான சாட்சிகள் உள்ளன.

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் ஏன் கைது செய்யப்படாதுள்ளார் என நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.