Header Ads



"அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராஜபக்சவினரின் ஆட்சியே நிலவும்"

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் மூலமாக அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராஜபக்சவினரின் ஆட்சியே நிலவும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவின் அமோக வெற்றியுடன் இந்த நாட்டில் புத்துணர்வுடன் கூடிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

பெரும்பான்மை மக்களின் முழுமையான ஆதரவும், சிங்கள பெளத்த அடையாளமும் கிடைத்துள்ளது. சிறுபான்மை மக்களின் ஆதரவும் கிடைத்திருக்கும் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் திட்டமிட்டு சிறுபான்மை மக்களின் ஆதரவு கிடைக்காத வகையில் செயற்பட்டனர்.

எனினும் நாம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் சகல மக்களையும் அரவணைத்து செல்லவே முயற்சிக்கின்றோம்.

இப்போது எமக்கு கிடைத்துள்ள வெற்றியின் மூலமாக அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ராஜபக்சவினரின் அரசாங்கம் தொடரும்.

நாம் செய்யும் வேலைத்திட்டங்கள், அபிவிருத்தி திட்டங்கள், வாழ்வாதார நகர்வுகள் மூலமாக மக்கள் அனைவரும் எமது ஆட்சியை கொண்டு செல்லவே ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் இப்போது ஒரு அணியாக ஒன்றிணைந்து ஐக்கிய பயணம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும். அதற்கான அழைப்பை இப்போதும் நாம் விடுக்கின்றோம.

மேலும் ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தி எமக்கான அரசாங்கம் ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கமாகும்.

அதற்கான எண்ணம் எம்மிடம் உள்ளதைப்போலவே பொதுத் தேர்தலை நடத்த ஐக்கிய தேசிய கட்சியும் முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. உண்மை ஏற்றப்பட்டுள்ள இனவாத விச ஊசியின் வலு இழக்கப்பட குறைந்தது 20 வருடம் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.