Header Ads



16 மாவட்டங்களில் கோத்தாபய வெற்றிபெறுவார் - 9 தொகுதிகளில் கடுமையான போட்டி

வரும் தேர்தலில் 16 மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று, அவரது ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

வியத்மக செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“தேர்தலில் மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் கோத்தாபய ராஜபக்சவே வெற்றி பெறுவார்.

கோத்தாபய ராஜபக்ச வெற்றிபெறும் 13 மாவட்டங்களில்,  சஜித் பிரேமதாசவுக்கு ஒரு தேர்தல் தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது.

மொத்தமுள்ள 160 தேர்தல் தொகுதிகளில், 119 தேர்தல் தொகுதிகளில் கோத்தாபய ராஜபக்சவுக்கு வெற்றி கிடைக்கும்.

9 தேர்தல் தொகுதிகளில் கடுமையான போட்டியால், இழுபறி நிலை காணப்படும்.

கடந்த தேர்தலில், அன்னம் சின்னத்துக்கு 90 தேர்தல் தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.

இம்முறை, 119 தொகுதிகளில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என்பதால், அவர்  வெற்றி பெறுவது உறுதி” என்றும் அவர் கூறினார்.

3 comments:

  1. அப்பப்பப்பா - என்ன ஒரு கண்டுபுடிப்பு ஒட்டு போடுற எல்லோரும் உங்க மாமி ஊட்டு மக்களா தலைவரே- அல்லாஹ் தீர்மானித்துவிட்டான் யார் ஜனாதிபதி என்று மக்கள் நாங்கள் ஒட்டு போடா காத்திட்டு இருக்கோம் -இவரு AC Room ல உட்க்கார்ந்து கொண்டு தேர்தல் முடிவு சொல்கிறார் இன்னும் தேர்தலே நடக்கல- என்ன கள்ள ஒட்டு போட தீர்மானமா?
    மர்சூக் மன்சூர் - தோப்பூர் -07

    ReplyDelete

Powered by Blogger.