October 19, 2019

சஜித் வென்றால் ரணில் நீக்கப்படுவாரா..? UNP க்குள் மீண்டும் நெருக்கடி, கடும் கோபத்தில் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமது தரப்பை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க போவதாக ராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளதாகவும் இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மீண்டும் நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சஜித் அணியின் முக்கிய உறுப்பினராக அஜித் பீ. பெரேரா, ரணிலை பதவியில் இருந்து நீக்கும் கதையை தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதுடன் பின்னர் அதனை பகிரங்கமாக கூற ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து தகவலை அறிந்து கொண்ட பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது புலனாய்வாளர்கள் மூலம் அதனை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலதிகமாக தேடிப்பார்த்த போது சஜித் அணியினர் திட்டமிட்ட வகையில் இதனை பிரசாரப்படுத்தி வருவதுடன் இது சம்பந்தமாக வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் அஜித் பீ. பெரேரா மட்டுமல்ல மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால், வெறுப்படைந்துள்ள பிரதமர், சஜித் அணியினருக்கு தேவையான வகையில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க இடமளித்து அதில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தீர்மானகரமான தேர்தல் நெருங்கி இருக்கும் நேரத்தில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கூட அல்லாத, மூன்றாம் நிலை உறுப்பினரான அஜித் பீ. பெரேரா போன்றவரை பயன்படுத்தி தனக்கு எதிராக கட்சிக்குள் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க கடும் கோபத்திலும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 13ஆம் திகதியில் இருந்து தேர்தல் தொடர்பாக ஊடக சந்திப்புகளை சஜித் பிரேமதாசவின் வோக்சோல் வீதியில் உள்ள தேர்தல் பிரசார தலைமை அலுவலகம், அலரி மாளிகை, சிறிகொத்த ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. அலரி மாளிகை மற்றும் சிறிகொத்தவில் ஏற்பாடு செய்யப்படும் ஊடக சந்திப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை குறுகிய காலத்தில் மிகவும் மோசமான நேரத்தில் மீண்டும் களத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

2

එක්සත් ජාතික පක්ෂයේ ජනාධිපතිවරණ අපේක්ෂක සජිත් ප්‍රේමදාස මහතා ජනාධිපතිවරණය ජයග්‍රහණය කළ සැණින් අග්‍රාමාත්‍ය රනිල් වික්‍රමසිංහ මහතාව තනතුරින් ඉවත් කර ඊට තම පාර්ශ්වයේ අයෙකු පත් කරගන්නා බව රාජ්‍ය අමාත්‍ය අජිත් පී. පෙරේරා මහතා ප්‍රකාශ කර ඇති බවත් ඒ හරහා යළිත් එජාපය තුළ අභ්‍යන්තර අර්බුදය උත්සන්න වී ඇති බවත් වාර්තා වේ.

සජිත් පිලේ කැපී පෙනෙන කථිකයෙකු මෙන්ම අවස්ථා ගණනාවකදී පක්ෂ නායකත්වය අපහාසයට උපහාසයට ලක් කළ පුද්ගලයකු වන අජිත් පී. පෙරේරා මහතා රනිල් ඉවත් කරන කතාව මුලින් මුලින් තම සමීප හිතවතුන් අතරේ ප්‍රචාරය කර ඇති අතර පසුව ඔහු එය ප්‍රසිද්ධියේම පවසන්නට ද පටන් ගෙන තිබේ.

මෙම කතාව ආරංචි වීමෙන් අනතුරුව තමන්ගේ ඔත්තු සේවා ඔස්සේ එය තහවුරු කරගෙන ඇති අග්‍රාමාත්‍ය රනිල් වික්‍රමසිංහ මහතා වැඩිදුර සොයාබැලීමේදී සජිත් පාර්ශ්වය විසින් සංවිධානාත්මකවම මෙම ප්‍රචාරණය මෙන්ම ඊට අදාළ වෙනත් කටයුතු ද කරගෙන යන බවත් අජිත් පී. පෙරේරා පමණක් නොව තවත් මන්ත්‍රීවරුන් ගණනාවක් මීට සම්බන්ධ බවත් අනාවරණය වී ඇත.ඉන් කලකිරීමට පත් අග්‍රාමාත්‍යවරයා සජිත් පිලටම අවශ්‍ය ලෙස ජනාධිපතිවරණ ප්‍රචාරණ ව්‍යාපාරයත් කරගැනීමට ඉඩ දෙමින් එහි කටයුතු වලින් ද සම්පූර්ණයෙන්ම ඉවත් වී ඇති බවයි ආරංචිමාර්ග සඳහන් කළේ.

තීරණාත්මක ජනාධිපතිවරණයක් මුවවිටේ තිබියදී, පක්ෂය තුළ ජ්‍යේෂ්ඨයින් ද නොවන තෙවනි පෙළේ අජිත් පී. වැන්නන් යොදවා ගනිමින් තමන්ට එරෙහිව පක්ෂය තුළම ප්‍රචාරණයන් ගෙන යාම රනිල් වික්‍රමසිංහ මහතාගේ දැඩි කෝපයට සහ පිළිකුලට හේතුවී ඇති බව සඳහන්.

මේ අතර පසුගිය 13 වනදා පටන් දිනපතාම සජිත් ප්‍රේමදාස මහතාගේ වොක්ෂෝල් වීදියේ මැතිවරණ කාර්යාලය, අරලියගහ මන්දිරය සහ සිරිකොත පක්ෂ මූලස්ථානය යන ස්ථාන තුනේම මාධ්‍ය හමු පැවැත්වීමට සැලසුම් කර තිබුණත් මේ වනවිට අරලියගහ මන්දිරයේ සහ සිරිකොත මූලස්ථානයේ මාධ්‍ය හමු අවලංගු වී තිබීමෙන් මෙම ආරංචි යම් ප්‍රමාණයකට තහවුරු වේ.

ඒ අනුව සජිත් ප්‍රේමදාස මහතාට ජනාධිපතිවරණ අපේක්ෂකත්වය ලබාදීමෙන් පසුව තාවකාලිකව සමනය වී තිබුණු එජාප නායකත්ව අර්බුදය ඉතාම කෙටි කලක් තුළ ඉතාම හානිදායක මොහොතක යළි කරළියට පැමිණ ඇති බව පෙනේ. 

2 கருத்துரைகள்:

பதவிப்பித்தும் அதிகாரவெறியும் இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் அழிவைத்தான் கொண்டுவரும்.

Concoted ...they avoided temple trees so not to use temple trees for political propaganda ..

Post a Comment