Header Ads



"எல்பிட்டிய தேர்தல் முடிவுகளை கொண்டு, ஜனாதிபதி தேர்தல் பற்றிய முடிவுகளை எடுக்க முடியாது" UNP + JVP

காலி எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் செலுத்தாது என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன தெரிவித்துள்ளன.

நேற்று வெளியான பிரதேச முடிவுகள் நாடு முழுவதும் வாழும் மக்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இது பிரதேச சபை ஒன்றின் வெற்றியாகும். ஐக்கிய தேசிய கட்சி நாடாளாவிய ரீதியில் பாரிய வெற்றிகளை அடைந்த போதும் பெந்தர, அல்பிட்டிய தொகுதிகளில் தோல்வி கண்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் வல்லமை நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.