Header Ads



தடுமாறுகிறது SLFP - இன்று அறிவிக்கவிருந்த தீர்மானம் ஒத்திவைப்பு, ஊடக மாநாடும் ரத்து

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் வெளியிடுவதற்காக இன்று (06) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

நேற்று (05) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டது.

அதற்கமைய,  இன்று (06) முற்பகல் 11.00 மணிக்கு அக்கட்சியின் தீர்மானம் அறிவிப்பதற்காக  ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஊடகவியலாளர் மாநாடு இரத்துச்செய்யப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர,  இந்த விடயம் தொடர்பில் இன்று மாலை மீண்டும் கலந்துரையாடி நாளை (07) தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கள் உள்ளிட்ட தரப்பினருக்க தீர்மானத்தை அறிவித்து அவர்களுடைய கருத்துகள் பெற்றுக்கொள்ளப்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.