Header Ads



சிறு­பான்­மை­யினர்­ வாக்களிக்காவிட்டாலும் கோத்­த­பாய, அமோக வெற்றிபெறு­வது நிச்­சயம் - விம­ல­வீர Mp

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறு­பான்­மை­யின மக்கள்  கோத்­த­பாய ராஜபக் ஷவுக்கு வாக்­க­ளித்­தாலும் வாக்­க­ளிக்­கா­விட்­டாலும் அவர்  அமோக வெற்றி பெறு­வது நிச்­சயம். 

அவர்தான் எமது அடுத்த ஜனா­தி­பதி என்­பதில் எந்தச் சந்­தே­க­மு­மில்லை. இன்னும் சில நாட்­களில் எமது ஆட்சி மலரும். எனவே அன்­னா­ரது வெற்­றியின் பங்­கா­ளர்­க­ளாக சிறு­பான்மைச் சமூகம் மாற வேண்டும் என அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விம­ல­வீர திஸா­நா­யக்­க­ அறை கூவல் விடுத்தார்.

 ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக பொது­ஜன பெர­முன கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளு­ட­னான  விசேட கலந்­து­ரை­யாடல் அட்­டா­ளைச்­சேனை றகு­மா­னி­யா­பாத் ­மற்றும் காரை­தீவு  பிர­தே­சங்­களில் நேற்­று­முன்­தினம்(14) இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வுகளில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

சர்­வ­தே­சத்­துக்கே சவா­லாக இருந்த யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து நாட்டில் நிலை­யான சமா­தா­னத்தை தோற்­று­வித்து பாரிய அபி­வி­ருத்­தி­க­ளையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இந்­நாட்டில் மேற்­கொண்டு வர­லாறு படைத்தார்.

அதே வழியில் நின்று செயற்­ப­டு­வ­தற்­கான சிறந்த ஜனா­தி­பதி வேட்­பா­ளரை எமது பொது­ஜன பெர­முன கட்சி களத்தில் இறக்­கி­யி­ருக்­கின்­றது. அவ­ருக்கு நாட்டில் உள்ள அனைத்து இன மக்­களும் இணைந்து வாக்­க­ளிப்­பதே எமது எதிர்­கால நல்­வாழ்­வுக்­கான அத்­தி­வா­ர­மாக அமையும்.

நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் ஆட்சி புரிந்த கடந்த நான்­கரை ஆண்­டு­களில் சிறு­பான்மைச் சமூ­கத்­துக்கு என்ன நன்­மைகள் கிட்­டி­யுள்­ளன என்­பதை நன்கு சிந்­தித்துப் பார்க்க வேண்டும். குறிப்­பாக முஸ்லிம் தலை­மைகள் இந்­நாட்டில் உள்ள முஸ்லிம் மக்­க­ளுக்கு கடந்த நான்­கரை வரு­டங்கள் பெற்றுக் கொடுத்­தது என்ன என்­பதை நான் பகி­ரங்­க­மாக கேட்க விரும்­பு­கின்றேன்.

வட –கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள சிறு­பான்மைச் சமூ­கத்­தினர் கடந்த 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்­டு­களில் மிகக் குறைந்­த­ளவு வாக்­கு­க­ளையே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு  வழங்­கி­னார்கள். இருந்த போதிலும் அவர் அமோக வெற்றி பெற்றார். அவ்­வாறு வெற்றி பெற்­றவர் சிறு­பான்மைச் சமூ­கத்­தி­னரை வெறுத்து ஒதுக்­க­வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி  பாரிய அபி­வி­ருத்தி புரட்­சியை ஏற்­ப­டுத்­தினார். 

எதிர்­வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கோத்தபாய ராஜபக் ஷ சிறுபான்மையினம் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அமோக வெற்றி பெறுவது நிச்சயம். எனவே அவரது வெற்றியின்  பங்காளர்களாக சிறுபான்மைச் சமூகம் மாற வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.