Header Ads



கோட்டாபயவை தோற்கடிக்க, முஸ்லிம்களின் வாக்குகள் அத்தியாவசியமாகும் - ஹேசா விதானகே Mp

சிங்கள பௌத்த வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதி ஒருவர் தெரிவுச் செய்யப்படுவதில்லை எனவும் எதிர்க்காலத்தில் அவ்வாறான ஜனாதிபதி தெரிவாக போவது இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார். 

அதனால் சிறுபான்மை கட்சிகளின் வாக்குகள் மிக அவசியம் எனவும் அதற்கு தேவையான பல்வேறு உத்திகளை கையாண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த கருத்துகளை அவர் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் குறிப்பிட்டார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவத்தால் முன்னைய ஆட்சியை தோற்கடித்தது போல் இந்த முறை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க முஸ்லிம் மக்களின் வாக்குகள் அத்தியாவசியம் எனவும் அவர் கூறினார்.

1 comment:

  1. Hesha Vidanage no-2 racist in sri lanka
    He need muslim votes ahhaaa

    ReplyDelete

Powered by Blogger.