October 20, 2019

முஸ்லிம்கள் எங்களுடன் உள்ளனர், முஸ்லிம்கள் மீது IS பெயர் பலகையை இந்த அரசு தொங்கவிட்டது

தற்போதைய அரசாங்கம் முஸ்லிம் மக்களின் நண்பன் அல்ல எதிரி என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

மாத்தறை வெலிகமை பிரதேசத்தில் இன்று -20- நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இனத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும் நாள் நவம்பர் 16. 17 ஆம் திகதி சூரியன் உதிக்கும் போது அறுதி பெரும்பான்மையுடன் நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்பார்.

அடிப்படைவாதிகளுக்கு வேலி போடும் தலைவவரை கோரும் நேரத்தில், சகல இனத்தவரின் பாதுகாப்பும் கோத்தபாய ராஜபக்சவிடம் மட்டுமே இருக்கின்றது.

நாடு சஹ்ரான்களின் குண்டுகளால் பரவியுள்ளது. இப்படியான நிலைமையில் நாடு கேட்கும் ஒரே தலைவர் கோத்தபாய ராஜபக்ச. கிழக்கில் தமிழ் மக்களும், சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு எங்களுடன் இருக்கின்றனர்.

முஸ்லிம் மக்கள் மீது ஐ.எஸ். பெயர் பலகையை இந்த அரசாங்கம் தொங்கவிட்டது. அந்த பெயர் பலகையை கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே கழற்ற முடியும்.

சகல இனங்களும் ஒரு இலங்கை தாயின் கீழ் ஒன்றுக் கூடும் நாள் நவம்பர் 16 ஆம் திகதி மட்டுமே எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

8 கருத்துரைகள்:

நீ என்னதான் கத்தினாலும் BBS யை உருவாக்கி முஸ்லிம்கள் மீது வன்முறை கலாச்சாரத்தை தொடங்கியதும் சஹரான்களை உருவாக்கி முஸ்லிம்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தியதும் கோட்டாவும் அவனுடைய அண்ணனும்தான்.

அய்யா வாக்குக்காக உங்கள் வார்த்தை மாறிவிட்டதே,இந்த உங்களின் பேச்சை முடிந்தால் சிங்கள பத்திரிகைகளுக்கும்,சமூக வலைத்தலங்கலிலுக்கும் அனுப்புங்கள் பார்க்கலாம்.அது உங்களுக்கு முடியாது ஏனெனில் இரண்டு பக்கமும் நடிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.கேவலம் வாகுகலுக்காக.உங்களை அருகில் வைத்திருப்பதனால்தான் திரு.மஹிந்த அவர்கள் இன்னும் சிறுபான்மை மக்களின் மனதில் இல்லை.

unakku eththanai nakkuhal ullathu.

மஹிந்தவையோ அல்லது கோத்தாவையோ சிறுபான்மை மக்கள் எதிர்க்கவில்லை.அவர்கள் இருவரையும் பிழையாக வழி நடத்தும் இனவாத கும்பலைத்தான் எதிர்க்கிறோம்.எப்போது இந்த இனவாத கும்பலை அவர்கள் இருவரும் துரத்தி விடுவார்கள் அப்போது பார்க்கலாம்.

shinkala isis , shinkala terrorist , supplyed arms for zaharan hazmee from walisara navy camp

இனக்கலவரத்தைத்தூண்டி அதில் கூதல் காய்பவர்களில் ஒருவன் தான் இந்த விமல் பூருவன்ஸ. இப்போது முஸ்லிம்களுக்கு கரட் காட்டத் தொடங்கியிருக்கின்றான். இந்த காபிரை இந்த நாட்டில் வாழும் அத்தனை முஸ்லிம்களும் பகிரங்கமாக எதிர்க்கவேண்டும். இந்த நாயுக்கு ஒரு முஸ்லிம் வாக்காவது கிடைக்காமல் இருக்க முஸ்லிம்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

Muslims have begun to act on their own. They are thinking differently now about politics. They will be voting Gotabaya Rajapaksa what ever these commentators are stating. The Muslims want a change too, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

who is this mental convener who deserves to be sent to the mental hospital immediately in order to save others from his sahran mentality.

Post a comment