Header Ads



சு.க. அரசியல்வாதிகளுக்கான ஹூ சத்தம் அதிகரிக்கிறது - Call எடுத்து ஆறுதல்படுத்திய கோத்தபாய

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தொடர்ந்தும் போராடி, அந்த கட்சியின் ஆதரவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அமரவீர மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு பொதுஜன பெரமுனவின் கூட்டங்களில் அவமதிப்பை ஏற்படுத்த எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகரவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோத்தபாய ராஜபக்ச இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

“ உங்கள் இருவரையும் நான் பார்த்துக்கொள்கிறேன். அமரவீரவும் நீங்களும் செய்த உதவியை எப்போதும் மறக்க மாட்டேன். பயப்பட வேண்டாம் என்னுடன் குருணாகல் கூட்டத்திற்கு வாருங்கள். யாராவது அவமதிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினால், நான் உங்களுடன் மேடைக்கு வருவேன். எதற்கும் பயப்பட வேண்டாம். என்னுடன் வாருங்கள். நான் உங்களை அழைத்துச் செல்ல வீட்டுக்கு வருகிறேன்” என கோத்தபாய தயாசிறியிடம் கூறியுள்ளார்.

குருணாகலில் நடைபெறும் கூட்டத்தில் தனக்கு எதிராக கோஷமிட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குருணாகல் மாவட்ட தலைவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சிலரை தயார்ப்படுத்தியுள்ளதாக கூறி, தயாசிறி ஜயசேகர குருணாகல் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான டி.பி.ஏக்கநாயக்க அந்த கூட்டத்தில் உரையாற்ற தயாரான போது, கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் ஹூ சத்தமிட்டு அவமதித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.