Header Ads



BMCH ஐ, வீடியோ எடுத்த 4 முஸ்லிம்கள் கைது


பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற முறையில் வீடியோ பண்ணிக் கொண்­டி­ருந்த நான்கு முஸ்லிம் வாலி­பர்கள் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி மண்­ட­பத்தில் கட­மை­யி­லி­ருக்கும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

பண்­டா­ர­நா­யக்க மண்­ட­பத்தில் கடந்த பத்து தினங்­க­ளாக புத்­தகக் கண்­காட்சி இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அது நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழ­மை­யோடு முற்­றுப்­பெற்­றது. மேற்­படி கைது செய்­யப்­பட்ட நான்கு பேரும் உட்­பி­ர­வே­சத்­திற்­கான அனு­மதி கட்­ட­ணத்­தையும் செலுத்­தாது, கடந்த 28 ஆம் திகதி சனிக்­கி­ழமை உட்­பி­ர­வே­சித்தே மேற்­படி வீடியோ நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இது பற்றி மேலும் தெரிய வரு­வ­தா­வது, 

குறித்த நான்கு சந்­தேக நபர்­களும் புத்­தக கண்­காட்­சிக்கு வரும் பார்­வை­யா­ளர்­க­ளோடு உள்­நு­ழைந்து மாநாட்டு மண்­டபம் உள்­ளிட்ட காட்­சி­களை வீடியோ பதிவு செய்து கொண்­டுள்­ளனர். இவர்கள் மீது சந்­தேகம் கொண்ட மக்கள் இவர்­க­ளிடம் கேள்வி எழுப்­பி­ய­துடன் இவர்­களை வெளி­யேற விடாது தடுத்து வைத்தே மாநாட்டு மண்­டப பொறுப்­பி­லுள்ள பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இவர்­க­ளி­ட­மி­ருந்து வீடியோ கெமரா ஒன்­றையும் மூன்று கைபே­சி­க­ளையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

புத்­தகக் கண்­காட்­சியை விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்­காக இவ்­வாறு ஈடு­பட்­ட­தாக அவர்கள் கூறி­யுள்­ளனர். ஆனால் 29 ஆம் திகதி முற்­றுப்­பெ­ற­வுள்ள இறுதிக் கட்­டத்தில் இவ்­வாறு நடந்து கொண்­டமை பொலி­ஸா­ருக்கு மேலும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­துடன் ஏற்­க­னவே இவர்கள் மீது சந்­தேகம் கொண்ட மக்கள் இவர்­க­ளிடம் தம்மைப் பதி­வு­செய்த காட்­சி­களை அழிக்­கும்­படி கூறி­ய­போது அவர்கள் அழித்து விட்­ட­தாகக் கூறி­யுள்­ளனர். ஆனால் அக்­காட்­சிகள் அழிக்­கப்­ப­டா­தி­ருப்­பதைக் கண்டும் மேலும் சந்­தேகம் தரு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கைது செய்­யப்­பட்ட நால்­வரும் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக கறு­வாத்­தோட்ட பொலி­ஸா­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­டப பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி டீ.பத்ம­சிரி மற்றும் கறுவாத் தோட்ட பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாரனாத் சமரகோன் ஆகிய இருவரும் தொடர்ந்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் வெல்லம்பிட்டிய, வெள்ளவத்தை, கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 24 – 43 வயதுகளுக்கிடைப்பட்டவர்களாவர்.

vidivelli

1 comment:


  1. These young fellows must understand CCTV is fixed and every second an incident is very sharply photographed. Having known all these, if they still are going to seek admission illegally, and do these type of sensitive activities, of course any person has the right to suspect. If they happen to be Muslims, matters are so serious. Our fellows must learn to behave in accordance with the places and circumstances.

    ReplyDelete

Powered by Blogger.