Header Ads



பயங்கரவாத பீதியை கிளப்பி தேர்தல் பிரச்சாரம் - மாத்தறையில் இப்படியும் நடக்கிறது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தரப்பு பயங்கரவாத பீதியை கிளப்பி வருவதாக சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாடசாலை மையப்படுத்தி இந்த பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளபபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் சில பாடசாலைகளில் காலை வேளையில் மாணவ மாணவியரின் புத்தக பைகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன முன்னணிக்கு ஆதரவான பாடசாலை அதிபர்கள் ஊடாக இந்த பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தென் மாகாண கல்விப் பணிப்பாளரினால் விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் அடிப்படையில் மாணவர்களின் புத்தகப் பைகள் சோதனையிடப்படுவதாக மாத்தறை மாவட்ட பாடசாலை அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவிற்கு அமைய இந்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஜனாதிபதி செயலகம் இவ்வாறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளது.

No comments

Powered by Blogger.