Header Ads



பாங்கொலி எனக்கு விருப்பமானது - பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு

அண்மையில் மிஷ்காத் ஆய்வு நிறுவனம் நடத்திய அல்குர்ஆன் வன்முறைக்குத் தூண்டுகிறதா என்ற நூல் வெளியீட்டு விழாவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு ஆற்றிய உரையின் ஒரு பகுதி

தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்களை அடக்கம் செய்வதில் மட்டக்களப்பில் பிரச்சினை ஏற்பட்டது. இவர்களை தமது ஊர்களிலேயே அடக்கவிடாமல் தடுத்தது எது என்பது இன்னும் தன்னிடம் கேள்வியாக எஞ்சியிருக்கிறது.

தான் மட்டக்களப்பில் மூவின மக்களுக்கும் மத்தியில் அமைதியாக வாழ்ந்த நாட்களை நினைவுபடுத்தியதோடு பாங்கொலி தனக்கு விருப்பமானது.

தென்னாசியாவில் சமயத் தீவிரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில் இந்த நூல் காலத்தின் தேவை. பௌத்த இந்து கடும்போக்குவாதங்களின் தீவிரத்தினால் முஸ்லிம்கள் வன்முறைக்குத் தூண்டப்படுவார்களோ என்ற அச்சம் எனக்கும் உள்ளது. 

ஜிஹாத் என்பதை புனிதப் போராகவே நினைத்திருந்த எனக்கு இந்த நூல் அதன் உண்மையை எடுத்துக் காட்டியது. ஊடகங்கள் இதனை முஸ்லிம்கள் தமது சமயத்தை நிலைநாட்டுவதற்கான போர் என்றே சொல்லி வருகின்றன. இதனால் அல்கைதா, பொகோஹராம் போன்ற இயக்கங்களின் செயற்பாடுகளினூடாக இஸ்லாத்தைப் பார்ப்பதற்கு மக்கள் தலைப்பட்டுள்ளனர். 

இது அரசியல் மயப்பட்ட பார்வையாகும். மனிதம், கருத்துச் சுதந்திரம் மற்றும் தெரிவுச் சுதந்திரம், அறிவு ரீதியான அணுகுமுறை என்பவற்றையே ஜிஹாத் குறிப்பிடுவதாக அவர் விளங்கப்படுத்துகிறார். 

கடும் போக்குவாதத்தை அணுகுவதற்கு அறிவுரீதியான அணுகுமுறை மிக முக்கியமானது. தற்கொலைதாரியின் உடற்பாகங்களைப் புதைப்பதிலும் கூட அறிவுரீதியான அணுகுமுறையை கையாண்டிருக்கலாம். ஜிஹாத் என்பது கடும் பிரயத்தனம் என்ற வகையில் இந்தப் புத்தகத்தை மூன்று மொழியிலும் வெளியிடுவதற்கு உஸ்தாத் மன்ஸூர் ஒரு ஜிஹாதையே செய்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

No comments

Powered by Blogger.