Header Ads



ஜனாதிபதிக்கு வீடு வழங்க வேண்டாமென, ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் கோரிக்கை


ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு அண்மையில் வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யுமாறு ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் அமைச்சரவையில் ஜனாதிபதியின் தற்போதைய அதிகாரபூர்வ இல்லத்தை ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னரும் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதி செயற்படும் போது எவ்வாறு அமைச்சரவை இவ்வாறு தீர்மானம் எடுக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இவ்வாறு அமைச்சரவை அவருக்கு சலுகைகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கிய போது அதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியினாலும் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி பக்கச்சார்பற்ற வகையில் செயற்படுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை ஏற்புடையதல்ல என ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தை அவர் ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னரும் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை ரத்து செய்யுமாறு அவர், அமைச்சரவையிடம் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.