Header Ads



கோத்தபாயவை கைதுசெய்ய முயற்சி - மகிந்த

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட என்.டி.ஐ என்ற தேசிய ஜனநாயக நிறுவகம் மற்றும் ஐ.ஆர்.ஐ என்ற சர்வதேச குடியரசு நிறுவகம் ஆகியவற்றின் உயர்மட்டக்குழு இன்று தூதுவர் கார்ல் இன்டர்பேத் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தது.

நடைமுறை அரசியல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சூழ்நிலைகளை கண்காணிக்கும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது அரசாங்கத்தினால் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர்களை கைதுசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மகிந்த ராஜபக்ச முறைப்பாட்டை செய்தார்.

இதேவேளை இந்த குழுவினர் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

1 comment:

  1. இரண்டுதேசிய அடையாள அட்டையை சட்டத்துக்கு விரோதமாகபெற்றுக்கொள்வதும், இலங்கையர் அல்லாத ஒருவர் எந்தவிதமான ஆவணங்களையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு வழங்காமல் இரண்டு பாஸ்ட்போர்ட்கள் பெறுவதும் சட்டத்துக்கு முரணான செயல், பாரதூரமான குற்றம். அத்தகைய குற்றமிழைத்த ஒரு நபரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தி அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் வரை சிறையில் வைக்கவேண்டும் என்பது சட்டம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும் சட்டத்தின் ஒரு பிரிவு. அப்படியானால் கோதாபாயாவை கைதுசெய்வதில் என்ன பிழையிருக்கின்றது. கைதுசெய்யாமல் இருப்பது தான் அரசாங்கம் செய்யும் பாரதூரமான தவறு.

    ReplyDelete

Powered by Blogger.