Header Ads



இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தான் அளித்த, பாதுகாப்பை கேலி செய்த கம்பீர்

இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், அதனை கேலி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சர்வதேச கிரிக்கெட் பல ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கிறது. அந்நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அணிக்கு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்து விடக்கூடாது  என்பதற்காக பாகிஸ்தான்  கிரிக்கெட் நிறுவனம் பலத்த பாதுகாப்பு அளித்து  வருகிறது. 

போட்டியில் பங்கேற்க சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு  ஜனாதிபதிக்கு கொடுக்கும் அளவுக்கு  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்  கிண்டலடித்துள்ளார்.  

இது தொடர்பில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கம்பீர், இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பகிர்ந்து கேலி  செய்துள்ளார். 

பாகிஸ்தானில் ஒருவர் எடுத்த காணொளியை பகிர்ந்த கம்பீர், இது காஷ்மீர் இல்லை. இது கராச்சி என்பதை நினைவு கூர்வோம்’’ என்று பதிவிட்டுள்ளார். 


5 comments:

  1. By this he agrees the aggressions and o0ression of India army in Kasmir

    ReplyDelete
  2. காஷ்மீரை விட காராச்சி மோசம் போல

    ReplyDelete
  3. இந்த மோடியின் கை ஆட்க்கள் இலங்கை அணி பாகிஸ்தான் போவதை தடுக்க கடும் முயற்சி எடுத்தும் பயணலிக்காததால் இப்பொழுது நையாண்டி செய்கிறார்கள்.

    ReplyDelete
  4. Gamblers of India tried everything to stop this Sri Lankan tour.now showing their real face to the international community.they can't tolerate their defeat.well done Sri Lanka whatever you achieve we support you.

    ReplyDelete
  5. இந்த மோடியின் கை ஆட்க்கள் இலங்கை அணி பாகிஸ்தான் போவதை தடுக்க கடும் முயற்சி எடுத்தும் பயணலிக்காததால் இப்பொழுது நையாண்டி செய்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.