Header Ads



சஜித்தின் வெற்றிக்காக தேன் நிலவுக்கு, செல்வதை கைவிட்ட இளம் அரசியல்வாதி


தனது திருமணம் அண்மையில் நடைபெற்றதாகவும் தேன் நிலவுக்கு செல்வதை கைவிட்டு, சஜித் பிரேமதாசவை மக்கள், ஜனாதிபதியாக தெரிவு செய்யும் போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

கட்டான பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச என்ற நபர் யார் என்பதை நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். கோத்தபாய ராஜபக்ச என்பவர், ஜனநாயகம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை இல்லாமல் செய்து, நாட்டின் அப்பாவி மக்கள் அச்சத்திலும் சந்தேகத்திலும் வாழ்ந்த யுகத்தை உருவாக்கிய நபர்.

இதன் காரணமாகவே 2015 ஆம் ஆண்டு ராஜபக்ச ஆட்சியை விரட்டியடித்தோம். சஜித் பிரேமதாச எப்போதும் ஊடகவியலாளர்களை தாக்கியதில்லை.

அடிமையாக வாழ வேண்டும் என்பதே பொதுஜன பெரமுனவினரின் தேவை. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டில், ஊழல், மோசடிகளை குறைக்க நடவடிக்கை எடுத்தோம்.

நாட்டில் உண்மை பெற்றி பெறுமாயின் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நிச்சயம் உண்மை வெற்றி பெறும் எனவும் காவிந்த ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.