Header Ads



சஜித்துக்கு மட்டும் போட்டு விடாதீர்கள் என, மகிந்த அணி இரகசிய அறிவுறுத்தல் செய்கிறது

- Mano Ganesan -

ஜேவீபி ஒரு அரசியல் சிறுபான்மை (Political Minority) கட்சி. இன்று ஒப்பீட்டளவில் நல்ல கட்சிதான். அதன் தலைவர் அனுர என் நல்ல நண்பர். அனுர வேட்பாளராக அறிவிக்கப்பட உடன் அவருக்கு முதலில் வாழ்த்து சொன்ன தமிழ் அரசியல்வாதி நான்தான். இக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் பலர் என் நண்பர்கள்தான்.

இந்த கட்சிக்கும் ஒரு கறுப்பு பக்க வரலாறு, ஐதேக, ஸ்ரீலசுக மற்றும் இன்றைய பொது பெரமுன மாதிரி, இருக்கிறது. எனினும் இன்றைய எல்லா பிரச்சினைகளுக்கும் வரலாற்றிலிருந்து விடை தேட கூடாது; வரலாற்றிலிருந்து பாடம்தான் படிக்க வேண்டும்., என்பதால் இதை மறந்து பார்க்க நான் தயார்.

ஆனால், இங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. ஜேவீபி, இன்றைய போட்டியில் ரொம்ப தூரம் தள்ளி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இந்நிலையில் இவர்களுக்கு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிப்பது, சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோட்டாவை வெற்றிபெற வைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

சஜித், கோட்டா - இருவரும் ஐம்பது விகிதத்துக்கு போட்டி இடும் போது, ஜேவீபி ஐந்து விகிதத்துக்கு போட்டி இடுகிறது. இதுதான் உண்மை. இதை மறைத்து, அலங்கார வார்த்தைகளை கொண்டு, பூசி மெழுகுவது பிழை.

இதை அறியாமல், சஜித்துக்கு போட வேண்டிய எமது வாக்கில் ஒரேயொரு விகிதத்தை நாம் அனுரவுக்கு போட்டு விட்டால், சஜித் தோற்க, கோட்டா வந்து விடுவார்.

(இதனால்தான், தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எமக்கு போடாவிட்டால், அவருக்கு போடுங்கள், இவருக்கு போடுங்கள், சஜித்துக்கு மட்டும் போட்டு விடாதீர்கள் என மகிந்த அணி இரகசிய அறிவுறுத்தல் செய்கிறது)

இதற்கு ஒரே வழிதான் உள்ளது. ஜேவீபி, சிங்கள மக்களை மத்தியில் தன் செல்வாக்கை அதிகரித்து, அதன் பின் நம்மிடம் வர வேண்டும். ஆனால், அது இன்னமும் நடைபெறவில்லை. மூன்றாம் இடம் என்று சொல்கிறோமே தவிர, அவர்கள் சஜித், கோட்டா வாக்கு வங்கிகளிடம் இருந்து ரொம்பவும் தூர தள்ளி கீழே இருக்கிறார்கள்.

முதலில், ஜேவீபி சிங்கள மக்களிடம் அடிப்படை வாக்குகளை 35 விகிதம் பெற்றால், நாம் அவர்களுக்கு மிகுதி தேவையான ஒரு 15 விகிதத்தை கொடுத்து வெற்றி பெற வைக்கலாம்.

இப்போது என்னவென்றால் இவர்கள் முதல் அடிப்படை வாக்கையே எங்களிடம் கோருகிறார்கள். இது இப்போது எம்மால் செய்ய முடியாது. அவர்கள் வெற்றி பெற்று தொழிலாளர் ஆட்சியை நிறுவும் போது இந்நாட்டில், நாம் தமிழ் பேசும் மக்கள் இருக்கவே மாட்டோம்.

பாராளுமன்ற தேர்தலின் பின், அமையும் பாராளுமன்றத்தில் வேண்டுமானால், இதுபற்றி யோசிக்கலாம்.

2 comments:

Powered by Blogger.