Header Ads



இங்கிலாந்தில் யாழ்ப்பாண முஸ்லீம்களின், ஒன்றுகூடல் நிகழ்ச்சி


சமுக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கிலும் ,சமூகத்துக்காக பல்வேறு பட்ட செயற்றிட்டங்களை ஒருங்கிணைக்கும் பொருட்டும் ஐக்கிய இராச்சிய யாழ்ப்பாண  முஸ்லீம்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த ஓன்று கூடல் நேற்றைய தினம் சனிக்கிழமை ளூட்டன் மாநகரில் இனிதே நடைபெற்றது .

நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சியில் சிறுவர்களின் நிகழ்ச்சிகள் , பான்சி ட்ரஸ் காட்சி , உதைப்பந்தாட்ட போட்டி ,பெண்களுக்கான  பல்வேறு பட்ட மேடை நிகழ்ச்சிகள்  ஆகியன இடம்பெற்றன . 

'சொல்லின் செல்வர் 'மர்ஹூம் யாழ் பளீல் தொடர்பான வீடியோ தொகுப்பு காண்பிக்கப்பட்ட போது அங்குள்ளவர்களை உணர்ச்சி வயப்பட வைத்தது .' பொன்னான நாடு பிறந்த நாடா பிழைக்க வந்த நாடா ' என்கிற விவாதம் சுவாரசியமாக இருந்தது. 

"யாழ்ப்பாணம்   என்கிற வரம்புக்கு அப்பால் சென்று ஆபிரிக்க நாடான காம்பியா முதல் நீர்கொழும்பு வரை உதவி தேவைப்படும் போது உதவி நல்குவதில் ஜே எம் ஏ எப்போதும் பின்நின்றது இல்லை . எதிர்காலத்தில் பல்வேறு செயற்றிட்டங்களை நடத்துவதில் அது முன் நிற்கும் " என அந்த அமைப்பின் தலைவர் கியாஸ் முத்து முஹம்மது உரையாற்றினார் .

கடந்தகால செயற்பாடுகள் ,எதிர்கால திட்டங்கள் தொடர்பாக செயலாளர்  சமீஸ் விளக்கமளித்தார்.நிகழ்ச்சிகளை அழகான முறையில் திறம்பட தொகுத்து வழங்கினார் கிஷோர் ஜஹான்.

ஜே எம் ஏ, ஆபிரிக்க நாடான காம்பியாவில் உள்ள வறிய கிராமம் ஒன்றில், ரமலான் மாதத்தில் இப்தார் நிகழ்ச்சி நடத்தியமை வீடியோ மூலமாக காண்பிக்கப்பட்டது.

மதிய போசனம், இரவு உணவு  மற்றும் இடைக்கிடையே அருசுவை மிக்க உணவுகள் ,தேநீர் பானங்கள் ஜே எம் ஏ அங்கத்தவர்களால் விருந்தோம்பல் பண்பு மேம்பட வழங்கப்பட்டன  .



2 comments:

  1. well done. Do something good for families back home. Plan well. Do not dispute like fanatic salafi groups. Now, Abu Bakr al-Baghdadi is killed. Now is time to preach a peaceful message of Islam . Do not create Zahran in the name of salafism and Whahabism.

    ReplyDelete
  2. Well said
    Seems to be a salafi group

    ReplyDelete

Powered by Blogger.