Header Ads



நிதி நெருக்கடியில் பிரதான கட்சிகள் - தேர்தல் பிரச்சாரத்திற்கு பணமின்றி திண்டாட்டம்

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு போதியளவு நிதியின்றி பிரதான அரசியல் கட்சிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதான வேட்பாளர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே இந்த நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பார்த்தளவு தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதியை திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் திரட்டிய சிலரும் மோசடிகளில் ஈடுபட்ட காரணத்தினால் திரட்டப்பட்ட முழுப் பணமும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கமே இந்த மோசடிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

வழமையாக தேர்தல் காலங்களில் தாராளமாக செலவழிக்கும் வர்த்தகர்கள் இம்முறை அதிகளவில் செலவழிக்க விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கோத்தபாய தரப்பு ஒகஸ்ட் 11ஆம் திகதி முதல் பாரியளவில் பிரச்சாரத்திற்காக செலவிட்டுள்ள போதிலும் அதற்கான பயன்கள் கிடைக்கவில்லை என தெற்கு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி இணைய மற்றும் பத்திரிகை விளம்பரங்களுக்காக பாரியளவில் பணத்தை செலவிட்டு நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக இலங்கையின் பிரதான தேர்தல்களில் நிதியீட்டம் செய்யும் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இம்முறை பணம் எதனையும் வழங்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.