Header Ads



குரோத கருத்துக்களை பதிவு செய்யும் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்படும்

தேர்தல் காலத்தில் முகப்புத்தகத்தை தடை செய்யவதோ அல்லது கட்டுப்படுத்துதோ அவசியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

அத தெரண BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சமூக ஊடகங்கள் ஊடாக குரோத கருத்துக்களை தூண்ட வேண்டாம் எனவும் அவ்வாறான கருத்து தூண்டும் சமூக ஊடக கணக்குகளை தற்காலிகமாக முடக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தேர்தல் சட்டத்தை பாதுகாத்து அனைவரும் வாக்களிக்குமாறும் இதன்போது எவ்வித தேர்தல் சட்டத்தையும் மீற வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

வாக்குப் பெட்டியில் 400 வாக்குச்சீட்டுக்களை மாத்திரமே பயன்படுத்த முடியும் எனவும் 3000ம் வாக்காளர் இருக்கும் தேர்தல் நிலையங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

காலை 7 மணி முதல் 4 மணி வரையான காலப்பகுதியில் வாக்கெடுப்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர முடியுமா என்பது சந்தேகம் எனவும் வாக்குச்சீட்டை திறந்து மூடுவதற்கு காலம் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதனால் 18 ஆம் திகதி மதியம் ஆகும் போது தேர்தல் முடிவுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.