Header Ads



மகிந்தவிடம் பல்டி, அடிக்கவிருப்பவர்களின் பட்டியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தற்போது ஆதரவளித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தயாராகி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் குறித்து கவனமாக இருக்குமாறு மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இணைந்து கொள்ள கூடும் என்பதால், அவர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானிக்குமாறும் மகிந்த ராஜபக்ச, இவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.