Header Ads



சாதாரண பொதுமகனை அரசனாக்க, எனக்கு வாக்களியுங்கள் - சஜித்


பொதுமக்களை வரிச்சுமையில் இருந்து விடுவிப்பதே எமது நோக்கம் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

நாரம்மல வாரச்சந்தை வளாகத்தில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

வரலாற்று சிறப்புமிக்க தம்பதெனிய பகுதியில் இந்நாட்டில் மீண்டும் சாதாரண பொதுமகனை அரசனாக்கும் சகாப்தத்தை உருவாக்க சஜித் பிரேமதாசவிற்கு வாய்ப்பளிப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். 

தொழில்களை வலுப்படுத்துவதன் மூலம் தம்பதேனியா பகுதியை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

உங்கள் ஆதரவால் நாட்டின் ஜனாதிபதியாக ஆவதாக இருந்தால் சாதாரண பொதுமக்களுக்கு செவி மடுக்க வேண்டும். 

மக்களின் கவலை, கண்ணீர் மற்றும் வலியை அறிந்து கொள்ள வேண்டும். 

நான் ஜனாதிபதியானவுடன் காபன் வரியை ரத்துச் செய்வேன். எனினும் பொதுமக்கள் மீது வரிச்சுமை அதிகரித்துள்ளது. 

எனது நோக்கம் பொதுமக்கள் மரணத்தை நோக்கி கொண்டு செல்வது அல்ல. அந்த நோக்கம் எனது பிரதிவாதிக்குதான் இருக்கிறது. எனக்கு இல்லை. 

16 ஆம் திகதி பொதுமக்களின் வேதனைகளை அறியும் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னர், பொதுமக்களை இந்த வரிச்சுமையில் இருந்து விடுவிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.