Header Ads



பலகத்துறையில் "புலனம்" நூல் வெளியீட்டு விழா (படங்கள்)


- எம்.ஜே.எம். தாஜுதீன் - 

பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் புலனம் நூல் வெளியீட்டு விழா நேற்று  (27.10.2019) சனிக்கிழமை போருதொட்ட அல் பலாஹ் கல்லூரியின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆசிரியர் யூ.எம். பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இளைப்பாறிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அஷ்ஷேக் எம். எம். மொஹமட் (நளீமி) அவர்கள் பிரம அதிதியாகக் கலந்துகொண்டார்.

விசேட அதிதியாக லேக்ஹவுஸ் தமிழ்  வெளியீடுகளுக்கான ஆலோசகர் ஈழத்துநூன் கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், தமிழ்த்தென்றல் அலி அக்பர், கவிமணி நஜ்முல் ஹுசைன், கவிஞர் ரவுப் ஹஸீர், சந்தக்கவிமணி கிண்ணியா அமீரலி, பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக இளைப்பாறிய முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். முனவ்வர், பலகத்துறைப் பள்ளிவாசல் பரிபாலனசபைத் தலைவர் எம். எஸ். எம். றிஸ்வி ஆகியோர் பங்குபற்றனர்.

14 தொழில் அதிபர்கள் புலனம் விசேட பிரதிகள் பெற்றுக்கொண்ட இவ்விழாவில் கம்மல்துறை கவிஞர்களான எம். றிஸ்வான் மற்றும் அபூபிலால் நஹ்தாஸ் ஆகியோர் கவி பாடினர்.

பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தால் கடந்த வருடம் நடத்தப்பட்ட  புலனம் புகைப்படக் கவிதைகள் போட்டியில் வெற்றிபெறெ;ற 12 கவிஞர்களுக்கு கௌரவ அதிதிகளால் பரிசில்கள் வழங்கப்பட்டன.




No comments

Powered by Blogger.