Header Ads



சுமந்திரனின் பதவிக்கு, ஆப்பு வைக்கப்படுமா...?

ஒற்றையாட்சிக்கு இணங்குவதில்லை என தெரிவித்த காரணத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் மற்றும் சட்டத்தரணி பதவியில் இருக்க தகுதியற்றவர் என சத்திய கவேஷகயோ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 

அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி பிரேமநாத் சீ. தொலவத்த, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் குறித்த கருத்து தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றினை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு கையளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட யோசனை ஒன்றிற்கு வடக்கின் செயற்படும் 5 அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்திருந்தன. 

வடக்கு மற்றும் கிழக்கினை ஒருங்கிணைத்து சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுத்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழித்தல், வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள பௌத்த குடியேற்றத்தைத் தடுத்தல் மற்றும் சிங்கள கிராமங்களை உடனடியாக அகற்றுதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் குறித்த யோசனையில் உள்ளடங்கியுள்ளது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் குறித்த யோசனை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது, தான் மற்றும் தனது கட்சி ஒற்றையாட்சியை நிராகரிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இந்த 13. யோசனைக்கும் எந்த பெரும்பாண்மை கட்சியும் இனங்கமாட்டார்கல்.யாராவது இணங்கினால் அந்த இணங்கும் வேட்பாளரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும்பன்மை மக்களால் முடிவுக்கு கொண்டு வரப்படும்.இதுதான் உண்மை

    ReplyDelete

Powered by Blogger.