Header Ads



முஸ்லிம்கள் கோத்தபாயவை, ஆதரிக்க உள்ளனர் - முபாற‌க் மௌல‌வி


- பாறுக் ஷிஹான் -

கல்முனை தமிழ்  முஸ்லிம்களை பிரித்து  மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்த  ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் குளிர்காய முனைகின்றனர் என  முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ஆதரித்து முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவரது அலுவலகத்தில் இடம்பெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (20) மாலை 9  மணியளவில்  நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் குறிப்பாக கிழக்கு முஸ்லிம் மக்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்க உள்ளனர்.

எனினும் எந்த விதமான உடன்படிக்கைகளும் இல்லாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு பெரும் முஸ்லீம்  கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றது.இச்செயற்பாடு இரு கட்சி தலைவர்கள் எமது மக்களை    அடிமைகளாக வைத்திருப்பது  செயற்படுவத போன்ற செயற்பாடாகவே பார்க்கின்றேன். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலங்களிலே பெரும் ஆபத்துக்களை இந்த முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக 2001ல் ஏற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலமானலும் சரி  இன்றைய ஆட்சியானாலும் சரி முஸ்லிம் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய  சூழ்நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தாங்கள் பொருப்பல்ல என்றும் அனைத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவே பொறுப்புக்கூற வேண்டும் என நழுவுகின்ற ஆட்சியாகவே காணப்படுகின்றது 

மேலும்  முஸ்லிம் மக்கள் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ்வை அமைச்சர் ரவூப் ஹக்கீம் விமர்சிப்பதென்பது சிறுபிள்ளைத் தனமானது. தேர்தலில் போட்டியிடுவதென்பது அவரவர் உரிமை  இதில் யாரும் தலையிட முடியாது  இருந்த போதிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதற்காக  முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வை கண்டு பயப்படுகின்றார் என்று தெரியவில்லை. ஆனால் பயப்படுகின்றார் என்று நன்றாக தெரிகின்றது என்று கூறினார். தேர்தல்கள் வரும் போது தான் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு ஞானம் பிறக்கின்றது .பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் நான்கரை வருடம் அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் நினைத்திருந்தால் கல்முனை பிரச்சினைக்கு ஒரு நாளில் தீர்வை பெற்றுத்தந்திருக்க முடியும். 

ஆனால் அவர் இந்த கல்முனை பிரச்சினையை பிச்சைக்காரனது புண் போன்று அதைக் காட்டியே அரசியல் செய்கின்றார். கல்முனை முஸ்லிம் மக்கள் சகோதர தமிழ் மக்களுடன் ஒன்றாக வாழ வேண்டும். தென் மாகாணத்தை பொறுத்த மட்டில் முஸ்லிம்கள் அனைவருடனும் சகோதரத்துவத்துடன் பழகும் போது ஏன் கல்முனை முஸ்லிம்களை பிரித்து பார்க்க வைக்கின்றனர் இந்த அரசியல்வாதிகள். மீண்டும் அன்னத்திற்கு வாக்களிக்க வைத்து  தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டுபண்ணி  ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் குளிர்காய முனைகின்றனர். மேலும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாவது 100 க்கு 120 வீதம் அறிவுபூர்வமாக தெரிந்த உண்மை என்று தனது கருத்தில் தெரிவித்தார்.

9 comments:

  1. முதலில் நீங்கள் இருக்கும் கூட்டணியில் இருக்கும் பலரின் பெயரை நீங்களாகவே சொல்லிப்பாருங்கல்.அன்மையில் தெற்கிலும்,கிழக்கிலும் எமக்கு எதிராக தீவிர வன்முரை,போராட்டங்கள்,இனவாத வெறியாட்டம் போட்டார்கள் அனைவரும் கூட்டாக கூடியுல்லனர்.இது உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா?அடுத்தது உங்களுக்கு முழு இலங்கையிலும் எத்தனை வாக்குகள் உள்ளன? எமது சமூகம் மஹிந்தவையோ அல்லது கோத்தாவையோ எதிர்க்கவில்லை,அவர்களுடன் இணைந்துள்ள பல இனவாதிகலைத்தான் எதிக்கிரோம்.மஹிந்த அய்யா எப்போது தன்னை சூழ உள்ள இனவாதிகலை விரட்டுவாரோ அப்போது பார்க்கலாம்.ஆனால் நீங்கள் உங்கலிடமுல்ல 200 அல்லது 300 வாக்குகளுக்காக முழு சமூகத்தையும் சேர்த்து கணக்கிடுவது உங்கள் முட்டாள்தனம்.

    ReplyDelete
  2. தயவுசெய்து இவனுக்கெல்லாம் அந்த கண்ணியமான பெயரைப்பாவிக்காதீர்கள்

    ReplyDelete
  3. UNP ஆட்ச்சியில் காவித்துண்டையும்,கருப்புத் துண்டையும் உடம்பில் உடுத்துக் கொண்டு எமக்கு எதிராக இனவாதத்தை கக்கி சும்மா இருந்த கலிசரை,காவாலிகலை உசுப்பேத்தி அனைத்து வன்முறை,இனவாதம் பன்னிய அனைவரும் இப்போது உங்கள் கூட்டனியில் என்பதனை நீங்கள் மறந்து இப்படியான கருத்துக்களினை பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை.அய்யா உலமா,மக்கள் வாழ்வது அதி நவீன காலத்தில் என்பதை மறந்து விடாதீர்கள்.நீங்கள் பல விடயங்கலை மறந்தாலும் மக்கள் மறக்க போவதில்லை.உலமா தலைவரே திரு.மஹிந்த,கோத்தா,பசில் மூவருடமும் கூறுங்கள் முதலில் அன்மையில் எமக்கு எதிராக பல வன்முறை,உண்ணாவிரதம்,இனவாதம்,அபாண்டம் சுமத்திய (மஞ்ஞல்,கருப்பு ஆடை உடுத்தியோரும்) கிழக்கில் Muslim களை கொண்டு குவித்தவரும் மற்றும் வி,உ.க வில் ஆரம்பிக்கும் பாரலுமன்ர உறுப்பினர்கலையும் விலக்க சொல்லி அப்போது பார்க்கலாம்.இவை அனைத்தும் தெரிந்தும் எவ்வாறு உங்களால் இப்படி பேச முடிகிறது.

    ReplyDelete
  4. இந்த மண்டை காய்ந்த முபாரக் மௌலவி என்பவர் முனாபிக்தனத்தின் மூத்தகுடிமகன், சமூகத்தைக் காட்டிக்கொடுத்து அவருடைய காரியத்தைச் சாதிப்பதில் கொத்துக்கொத்தாக நரிமூலையைக்கொண்டவர், இந்த கழுதையின் பின்புறம் செல்லும் அனைத்துக்கழுதைகளும் கடாக்களும் ஸஹ்ரானின் பயிற்சி முடித்த மண்டை காய்ந்த நரிக்கூட்டங்களாகத் தான் இருக்கமுடியும். எனவே, இந்த பயங்கரவாதி பற்றி முஸ்லிம் சமூகத்தை எச்சரிக்கின்றேன். இந்த நரி பிரநிதிப்படுத்தும் மூனுசிலீன்களின் மொத்த வாக்குகளின் தொகை இரண்டரை அல்லது அதிகபட்சம் மூன்று. அவ்வளவுதான்.

    ReplyDelete
  5. குண்டு வெடிப்புப் பின்னர் சகோ.hisbullah வுக்கு எதிராக இனவாதம் கக்கிய நபர்கள் கிழக்கில்,தெற்கில் இப்போது எங்கு உள்ளார்கள்,உங்கள் அனியில்தானே,அதை நீங்கள் மறந்தாலும் சகோ.hisbullah மறக்கமாட்டார் என நினைக்கிறோம்.ஏனெனில் அவருக்காக அந்த இனவதிகலின் நடவடிக்கைக்கு எதிராக இந்த வலைத்தலத்தில் எமது எத்தனையோ சகோதரர்கள் போராடினோம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

    ReplyDelete
  6. முஸ்லிம்கள் என்று முழு சமூகத்தையும் குறிப்பிட்டு சொல்வதட்க்கு நீங்கள் யாரு
    உங்களை சூழ உள்ள 45 வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு முஸ்லீம் சமூகம் முஸ்லீம் சமூகம் என்று கங்கணம் கட்டித்திரியும் கொக்கரித்துத்திரியும் நீங்கள் ஒருசில இனவாதிகளின் ஏஜென்ட் என்பதை எம் சமூகம் அறியும்.
    நாங்கள் வெறுப்பது இனவாதிகளை மட்டுமே. வேட்பாளர்களை அல்ல. முஸ்லிம்களின் பச்ச துரோகி நீங்கள் - உனது கௌரவம் உன் பட்டத்திட்க்கு மட்டுமே - உனக்கு அல்ல.
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்-07

    ReplyDelete
  7. Are you Considering you and your group as a Muslims? Mr Mubarak??

    ReplyDelete
  8. This fellow should be admitted to angoda or sent to Andaman Islands for treatment.from where did d he get his ulema degree...is he eating really ce or grass...

    ReplyDelete

Powered by Blogger.