Header Ads



புத்தளம் குப்பை விவகாரம், நேற்று நீதிமன்றத்தில் நடந்த வாதம் - வழக்கும் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

புத்தளத்தில் இருந்து அறுவக்காடு குப்பை கொட்டும் இடத்திற்கு குப்பைகளை எடுத்துச் செல்லும் போது உரிய தரத்தில் அவற்றை கொண்டுச் செல்லுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் அநுர இந்திரஜித் புத்ததாச சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேற்று (17) உத்தரவிட்டுள்ளார். 

புத்தளம் பகுதி மக்கள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் அளித்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

வழக்கு இலக்கம் CA/338/19 ற்கு அமையவும் 198 ஆம் பிரவுக்கு அமையவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை கருத்திற் கொண்டு 104 / என்ற வழக்கை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரமும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோத்தாகொட தீர்பளித்திருந்தார். 

எனவே, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்பிற்கு அமைய புத்தளத்தில் இருந்து அறுவக்காடு பகுதிக்கு குப்பைகளை கொண்டு செல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

அதேபோல் புத்தளத்தில் இருந்து அறுவக்காடு பகுதிக்கு குப்பைகளை கொண்டு செல்லும் போது, அங்கு வாழும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வண்ணம் கொழும்பு மாநகர சபை மற்றும் குப்பைகளை கொட்டும் நிறுவனம் ஒப்புக் கொண்டபடி குப்பைகளை கொண்டு செல்வதில் எந்த தடையும் இல்லை எனவும் நீதவான் நீதிமன்றம் பொதுமக்களுக்கு தெரிவித்தது. 

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர், நில மீட்பு பணிப்பாளர், வனவிலங்குத் துறை பணிப்பாளர் நாயகம், புத்தளம் நகர சபை செயலாளர் மற்றும் வனத்துவில்லு பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் இந்த விவகாரத்தை ஆராய்து நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றம் அறிவித்திருந்தது. 

அந்த அறிக்கையை பரிசீளித்த பின்னரே தீர்பு ஒன்றை வழங்க முடியும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதற்கமைய 2020 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

No comments

Powered by Blogger.