Header Ads



கோத்தபாயவுக்கு ஓட்டுப்போட, வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்கள் வருகின்றனர் - பீரிஸ்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பலர் நாடு திரும்ப உள்ளதாகவும் இம்முறை வாக்களிக்கும் வீதம் அதிகரிக்கும் எனவும் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -21- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக நாட்டில் எந்த தேர்தலுக்கு இல்லாத அளவிலான அக்கறையும் உத்வேகம் காணப்படுகிறது.

வெளிநாடுகளில் வேலை செய்யும் 6 ஆயிரம் இலங்கையர்கள் தேர்தல் வாக்களிப்பதற்காக இலங்கைக்கு வர பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளனர். இம்முறை 80 வீதமான வாக்குகள் பதிவாகும்.

இது மிகவும் தீர்மானகரமான சந்தர்ப்பம். எமது நாட்டின் கலாசாரம், தேசிய அடையாளம்,ஆத்ம கௌரவம் மற்றும் தேசிய வளங்களை பாதுகாக்க கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பம் இது என்ற தெளிவான உணர்வு இருப்பதன் காரணமாகவே சமூகத்தில் இந்த பெரிய அக்கறை ஏற்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவை தேசிய வேட்பாளராக கருத முடியும்.சிங்கள வாக்குகளில் 70 வீதமான வாக்குகளை அவர் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

சிங்கள பௌத்தர்கள் மட்டுமல்ல, சிங்கள கத்தோலிக்க மக்களும் இருக்கின்றனர். அவர் ஒரு இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. முழு நாட்டையும் பிரதிநிதித்துவம் செய்யும் பொது வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுகிறார் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Waanga.kuutittu waanga.almighty will driven out bad rullers from this country.

    ReplyDelete
  2. சட்டம் கற்ற கழுதை கூறுகிறது,கோதாபாயா இம்முறை 70% வாக்குகளைப்பெறுவாராம். அவருடைய அடிவருடி வாசதேவ கூறுகிறார். அண்மையில் ஆஸிரி வைத்தியசாலை ஊழியர்கள், தாதிமார்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் சஜித்துக்கு 1400 வாக்குகளும் கோதாபாயாவுக்கு 400 வாக்குகளும் ஜேவீபிக்கு 300 வாக்குகளும் கிடைத்ததாக அவர் கூறுகின்றார். மோட்டுச் சாமிபேராசிரியர் முதல் சாதாரண மனித தோற்றத்தில் உள்ள கழுதை வரை பொதுமக்களை வழிகெடுக்கும் தீயசெயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

    ReplyDelete
  3. இனவாத அரசியல் பயணத்தின் ஆணிவேரே- விடுமுறைக்கு 03 பேர் நாட்டுக்கு வந்தால் அதையும் வைத்து அரசியல் பிழைப்பா -ஐயா உங்களுக்கு பேச ஒன்னும் இல்லையென்றால்-வாய்மூடி இருங்கள் இவ்வளவு நாளும் எப்படி இருந்தீரோ அப்படி-
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.