Header Ads



புலிகளுக்கு புத்துயிர் வழங்க பாரியளவு பணப்பரிமாற்றம் - மலேசிய அதிகாரிகள் அம்பலமாக்கினர்

புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர்  அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாரியளவு பணப்பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள மலேசிய அதிகாரிகள் அது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி டட்டுக் அயோப்கான் மைடின் பிச்சை இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வங்கிகணக்குகளை ஆராய்ந்தவேளை இந்த விபரங்கள் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் மூலமும் அவர்களது கைத்தொலைபேசிகளை ஆராய்ந்ததன் மூலமும்  காவல்துறையினர் விடுதலைப்புலிகளின் கொடிகள் அந்த அமைப்பின் தலைவரின் படங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதுடன் பெருமளவு பணப்பரிமாற்றம் இடம்பெற்றதையும் கண்டுபிடித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்,மலேசியாவில் ஆட்சேர்;ப்பு அணி திரட்டல் நடவடிக்கைகளிற்காக இந்த நிதியை பயன்படுத்ததிட்டமிட்டிருக்கலாம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிற்கு புத்துயிர் அளிப்பதற்கு அமைப்பொன்று முயற்சிகளை மேற்கொள்கின்றது இதன் காரணமாகவே இந்த கைதுகளை மேற்கொண்டுள்ளோம் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் தனிநபர் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தில் இருவரை கைதுசெய்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறைகளை ஆதரித்ததன் காரணமாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்,எந்த கட்சியை சேர்ந்தவர்களாகயிருந்தாலும் காவல்துறையினர் சகித்துக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்துள்ள அந்த அதிகாரி விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளிப்பவர்களையும் நிதி உதவி அளிப்பவர்களையும்; உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நிலைமை குறித்து அனுதாபம் கொண்டிருப்பது பிழையில்லை ஆனால் விடுதலைப்புலிகளை ஆதரிப்பது தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. கொஞ்ஞம் கொஞ்ஞமாக புலிப் பயங்கரவாதம் ஆரம்பிப்பது போல் உள்ளது

    ReplyDelete

Powered by Blogger.