Header Ads



அரசியல்வாதிகளுக்கான ஆடம்பர வாகனங்களின், இறக்குமதிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் - சஜித்

தமது ஆட்சியில் அரசியல் பதவிகள் ஆடம்பரமானவையாக அல்லாமல், கடினமானதாக மாற்றப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிப் பெற்றதன் பின்னர், உடனடியாக வாகனங்களை இறக்குமதி செய்கின்ற கலாசாரம் ஒன்று நடைமுறையில் உள்ளது.

அந்த கலாசாரம் முற்றாக மாற்றப்படும்.

ஆடம்பரமான அரசியல் பதவிகள் இல்லாமல், கடினமான பதவிகளாக அரசியல் துறையை மாற்றுவதே தமது இலக்கு.

அரசியல்வாதிகளுக்கான ஆடம்பர வாகனங்களின் இறக்குமதிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

தமது ஆட்சியில் மக்கள் தங்களது வயிற்றைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டிய நிலை இருக்காது.

அரசியல்வாதிகளே தங்களது வயிற்றைக் கட்டிக்கொண்டு நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

1 comment:

  1. ஓகே இது நல்லது மிக கட்டாயமான ஒரு விடயம் காரணம் மக்களின் ஓட்டுகள் மூலம் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு ஆடம்பர வாகனம் தேவை இல்லை, நாட்டுக்கு அந்நியசெலாவணியை கொண்டுவரும் வெளிநாட்டில் வசிக்கும் நாட்டுக்கு பிரயோசனம் தந்த தந்து கொண்டிருக்கும் இலங்கை பிரஜைகளுக்கு சிறு வரியை அரவிட்டு வாகன இறக்குமதிக்கு அனுமதி கொடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.