Header Ads



தேர்தல் முடிந்தவுடன் முஸ்லிம்களுக்கு, எதிரான திட்டங்கள் அரங்கேற்றப்படவுள்ளன - ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை


ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு தனது ஆதரவை வழங்கி, ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களை போல அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ள தனக்கும் முடியும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த அமைச்சுப் பதவிகளால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் - பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, கல்குடா தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஓட்டமாவடி, மீராவோடை அந்நூர் மண்டபத்தில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் வைத்து உருவாக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்து கொண்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கு, சிரமங்களுக்கு ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரும் தீர்வு கிடைக்கப் போவதில்லை.

நமது முன்னோர்கள் சிரமங்களுக்கு நமக்கு சட்டரீதியாக பெற்றுத் தந்த உரிமைகளை சட்டரீதியாகவே மீள பறிப்பதற்கு இரு பிரதான வேட்பாளர்களின் முகாம்களில் இருக்கின்ற நமது சமூகத்தின் எதிரிகள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர்.

தேர்தல் முடிந்தவுடன் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக முன்னெடுப்பார்கள்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் முஸ்லிம்கள் அனுபவிக்கின்ற மத சுதந்திரம் - உரிமைகளை எவ்வாறு பறிப்பது என்பது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஆசு மாரசிங்க, ரத்தன தேரர் மற்றும் ஞானசார தேரர் போன்றவர்களின் தலைமையில் சூழ்ச்சி செய்யப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தேர்தல் வந்தமையால் தேர்தல் முடிந்தவுடன் அவர்களின் திட்டங்களை அரங்கேற்றுவதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.

நம்மை பொறுத்தவரை சஜித் பிரேமதாசவோ, கோத்தாபய ராஜபக்சவோ, ரணில் விக்ரமசிங்கவோ, மஹிந்த ராஜபக்சவோ எமக்கு எல்லாருமே ஒன்றுதான்.

எமக்கு எவரும் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் கிடையாது. இவர்கள் எமது சமூகத்தின் உரிமைகளை மீளப்பறிப்பதில் ஏட்டுக்குப் போட்டியாக செயற்படுவார்கள்.

இவர்கள் எமது உரிமைகளை பாதுகாப்பார்கள் என்றோ எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளின் போது எமக்கு உதவுவார்கள் என்றோ ஒரு போதும் நம்ப முடியாது.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அலுத்கம கலவரம் ஏற்பட்ட போது எமது சமூகம் மாற்றமடைந்து மஹிந்த ராஜபக்சவை தூக்கியெறிந்து தோல்வியடையச் செய்தது.

பின்னர் மைத்திரிபால சிறிசேனவின் பின்னணி பற்றி எதுவும் யோசிக்காமல் முஸ்லிம் அரசியல் தலைமைகள் உள்ளிட்ட சகலரும் அவருக்கு ஆதரவு வழங்கி 16 இலட்சம் முஸ்லிம் வாக்குகளில் 12 இலட்சம் வாக்குகளை அள்ளி வழங்கி அவரை ஜனாதிபதியாக்கினோம்.

ஆனால், இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதும் - தாக்கப்பட்டதும் கடந்த நான்கரை வருட அவரது காலப்பகுதியிலாகும் என கூறியுள்ளார்.

2 comments:

  1. இவரின் கருத்துகளை வாசித்தால் சிரிப்பு தான் வருகிறது.
    யார் என்னத்தை சொல்லுகின்றது என்று ஒரு விபஸ்த்தை இல்லாமல் போய்விட்டது.

    ஆனால் இப்படியான அரசியல் கோமாளிகளுக்கு தான் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள்

    ReplyDelete

Powered by Blogger.