Header Ads



சுர்ஜித்தின் ஆடையைக் பிடித்தபடி கதறும் தாய் - பொய்யான வாக்குறுதி தர விரும்பவில்லை என அதிகாரிகள் கைவிரிப்பு


திருச்சி மணப்பாறை பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்கும் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள உண்மையான கள நிலவரம் வெளியாகியுள்ளது.

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்க கடந்த 79 மணி நேரமாக நிபுணத்துவம் பெற்ற பல குழுக்கள் தீவிரமாக போராடி வருகிறது.

இருப்பினும், இதுவரை உறுதியான முடிவுக்கு எட்ட முடியாமல் நிபுணர்கள் குழு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தன்று ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித்தின் அழுகை கேட்டுக் கொண்டிருந்த சில மணி நேரம் வரை,

நம்பிக்கையுடன், தமது மகன் காப்பாற்றப்படுவார் என ஏக்கத்துடன் காத்திருந்த சுர்ஜித்தின் தாயார்,

கடந்த சில தினங்களாக, உணவு தண்ணீரின்றி, சிறுவனின் ஆடையைக் கட்டியணைத்தபடி கண்ணீருடன் படுத்திருக்கிறார்.

அதிகாரிகளிடம் தமது பிள்ளையை மீட்டுக் கொடுங்கள் என கெஞ்சும் அவருக்கு, உறுதியான பதில் தர அதிகாரிகள் தரப்பு அல்லது அரசு தரப்பு என எவரும் தற்போது முன்வரவில்லை என கூறப்படுகிறது.

நீண்ட 79 மணி நேரம் கடந்திருக்கும் நிலையில், தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் இத்தனை நாள் மேற்கொண்ட மீட்பு முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்விடுமோ என பலரும் அச்சம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

களத்தில் உள்ள செய்தி ஊடகங்கள் பல கடந்த பல நாட்களாக அங்குள்ள சம்பவங்களை நேரலை செய்துவரும் நிலையில்,

தமது மகனை மீட்கும் அந்த கடைசி நொடிகளை எவரும் நேரலை செய்ய வேண்டாம் என அவரது தாயார் கண்கள் பனிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டுமின்றி சுர்ஜித் மீட்பு தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் இங்குள்ள எந்த அதிகாரிகளுக்கும் உறுதியான ஒரு திட்டம் இல்லை எனவும் கூறப்படுகிறது.

2

திருச்சி மாவட்டத்தில் ஆள்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனின் தற்போதைய நிலை குறித்து பொய்யான வாக்குறுதி தர விரும்பவில்லை என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆள்துளை கிணற்றில் சிக்கிய 70 மணி நேரத்தில் மீட்டெடுத்தால் சிறுவனை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தரப்பு ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில்,

தற்போது பல தடங்கல்களை கடந்து மீட்கும் பணி 4-வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில் சிறுவன் சுஜித்தின் தற்போதைய நிலை குறித்து களத்தில் இருக்கும் நிபுணர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தங்களால் பொய்யான வாக்குறுதிகளை தர விரும்பவில்லை என கூறும் நிபுணர்கள் தரப்பு, இருப்பினும் நம்பிக்கை கைவிடவில்லை எனவும் கண்டிப்பாக மீட்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த அந்த நாள் காலை, சிறுவன் சுர்ஜித் வெறும் இரண்டு இட்லி மட்டுமே சாப்பிட்டதாகவும், மதியம் உணவருந்தாமல் விளையாட்டில் நேரத்தை செலவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில்,

குழியில் சிக்கி நான்கு நாட்களாக 2 வயது சிறுவனால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மட்டுமின்றி, அதுபோன்ற ஆழ்துளை கிணற்றுக்குள் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் எனவும், வெறும் நாலரை அங்குலம் கொண்ட இந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் சிறுவனின் நிலை உண்மையில் கவலை தரும் வகையிலேயே இருக்கும் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

1 comment:

  1. Allah has protected the life of kids and giant I situations worse than this.... keep trust in Allah (true one god)... He will protect him insha-Allah

    ReplyDelete

Powered by Blogger.