Header Ads



தற்போது நாட்டுக்கு தேவை துட்டகைமுனு அல்லது ராஜபக்ச ஒருவர் - எஸ்.பி.

வேதனையில் இருக்கும் அனைவருக்குமான தொலைநோக்கு பார்வை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவுக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி - தலாத்துஓயா பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

2005ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி இருண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றார். அப்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு, கிழக்கை உடன்படிக்கை மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எழுதி கொடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு 2002ஆம் ஆண்டு உலகில் மிகவும் பலமிக்க பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது. பிரபாகரனிடம் கையளிக்கப்பட்டிருந்த நாட்டை மகிந்த ராஜபக்ச விடுவித்தார்.

அது மாத்திரமல்ல, வடக்கை மீட்கும் விடுதலை போராட்டத்தில் மிகப் பெரிய வீரனாக கோத்தபாய ராஜபக்ச இருந்தார். ராஜபக்ச யுகத்தை தாய்மார் என்று மறக்க மாட்டார்கள்.

போர் வெற்றியின் பின்னர் கோத்தபாயவுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, கொழும்பு நகரை ஆசியாவில் வேகமாக அபிவிருத்தியடையும் நகரமாக மாற்றினார்.

பயங்கரவாதிகள் அனைத்து இடங்களிலும் இருக்கின்றனர்.சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்தில் அவர்கள் நாட்டுக்குள் வர காத்திருக்கின்றனர். தற்போது நாட்டுக்கு தேவை துட்டகைமுனு அல்லது ராஜபக்ச ஒருவர்.

நாடு பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. நாட்டுக்கு துட்டகைமுனு யுகம் ஒன்று அவசியம்.முற்போக்கான மக்களையும், பௌத்த சங்கத்தினரையும இந்த நாட்டையும் பொறுபேற்குமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுப்பதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. நீங்கள் சொல்லும் இருவரும் செத்துப்போய் விட்டார்கள்.

    ReplyDelete
  2. நீ சொல்லும் இரண்டு பேரும் தமிழ் இனத்தை துடிக்கத் துடிக்க கொன்றவர்கள்தான்.

    ReplyDelete

Powered by Blogger.