Header Ads



இனவாதிகள், மதவாதிகளுக்கு தேர்தலில் இடமளிக்கக் கூடாது - ரிஷாட்

இனவாதிகள், மதவாதிகளுக்கு தேர்தலில் இடமளிக்கக் கூடாது எனவும், தேர்தலில் வெற்றி கொள்வதற்காக சஹ்ரானுடைய கதைகளை போடுகின்றார்கள் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா நகரசபை பொது மைதானத்தில் இன்றிரவு -24- இடம்பெற்ற இளைஞர் மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலை வெற்றி கொள்வதற்காக தற்பொழுது மொட்டு கட்சியினர் சஹ்ரான் உடைய கதைகளை பரப்பி மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி வருவதாகவும், தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காக இரண்டு தரப்பினரையும் மோதவிடும் நோக்கில் பல முரண்பாடான கருத்துக்களை முன்னிறுத்தி வருவதாகவும் ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை தமிழ் கிராமங்களில் ஒரு கருத்தையும், முஸ்லிம் கிராமத்தில் இன்னுமொரு கருத்துக்களையும் கூறி மக்களை திசை திருப்பி மொட்டு கட்சியினர் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் எமது சிறுபான்மை சமுதாயத்தை ஏமாற்றுவதற்காக இறங்கி செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரானுடன் தொடர்புபடுத்தி முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என கூறி முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பல சதித் திட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இலங்கை நாட்டின் பொலிஸார் நேர்மையாகச் ஏற்பட்டமையினால் நாங்கள் குற்றவாளியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் பலர் எம்மை குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கு பல குற்றச்சாட்டுக்களையும், வழக்குகளையும் தாக்கல் செய்து வந்தனர்.

பொலிஸார் நேர்மையாக செயற்பட்டமையினால் சிறந்த தீர்வு கிடைத்துள்ளது.

இதேவேளை சட்டத்தை யாருக்கும் கையிலெடுக்க விடமாட்டோம் எனக் கூறுகின்ற சஜித் பிரேமதாசவுக்கு நாங்கள் சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் எனவும், சிறுபான்மையின மக்கள் அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து அன்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமெனவும், கேட்டுக்கொள்கின்றோம்.

அண்மையில் நாமல் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்களை இழிவாக பேசிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முஸ்லிம் சமூகத்திற்காக ஒன்றினைந்துள்ளோம்,அன்று இந்த சமூகத்திற்கே எமது பதவிகளை தூக்கி எறிந்தவர்கள்.

நாம்!இன்று சஜித் பிரேமதாஸ கொலைகாரர் அல்ல ஜனநாயகவாதி நாம் அவரிடம் எமது கட்சி பேசியுள்ளது. வடக்கு கிழக்கில் காணிப்பிரச்சினைகளை குழு அமைத்து ஒரு வருடத்தில் நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த அரசியல் எங்களுக்கு புதிதல்ல எமது சமூகத்திற்காக நாம் எமது உயிரையும் துச்சமென மதிக்காது களத்தில் இறங்கியவர்கள்.

நாம் எமது சமூகம் பயங்கரவாதிகளுக்கு ஒரு போதும் துனைபோக மாட்டார்கள். எமது சமூகத்திற்கு நாடாளுமன்றத்தில் அச்சமின்றி எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.