Header Ads



முஸ்லிம்களுக்கு முதற்தடவையாக ஜும்மாவிற்கும், பள்ளிவாசலுக்கும் செல்லக்கிடைக்கவில்லை - மஹிந்த


மாத்தறை மாவட்ட முஸ்லிம்களை 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சி முஸ்லிம்களுடனான சந்திப்பை ஏற்பாடு செய்தனர். கவுள்ளார். இச் சந்திப்பானது கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா, உட்பட மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஏனைய பொதுஜன பெறமுனையை பிரதிநிதிப்படுத்தி மாத்தறை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் முஸ்லிம்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி மற்றும் ராசிக் சரூக், பிரதேச சபைகளை பிரதிநிதிப்படுத்தி அரசியல் வாதிகளான வெலிகம நகரசபை முன்னால் தலைவர் மொஹமட் ஹுஸைன் ஹாஜியார் முஹம்மத், பேருவளை நகரசபை முன்னால் தலைவர் மில்பர் கபூர்,தம்புள்ள நகரசபை முன்னால் தலைவர் ஹில்மி கரீம், அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் மற்றும் ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் பாரிஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

பேருவளை நகரசபை முன்னால் தலைவர் மில்பர் கபூர் தனதுரையில்,

உங்கள் அனைவருக்கும் தெரியும் 2015 ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் யாரின் பக்கம் இருந்தார்கள் என்பது, அதற்கான காரணம் உள்ளது. அதுதான் நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பேருவளை நகரசபை அலுத்கம கலவரம். அன்றைய அரசு என்ற அடிப்படையில் அதனை எம்மால் நிறுத்த முடியும் என்று ஆனால் அதன் கருத்து நாம்தான் அதை செய்தது என்பதல்ல.

அன்று முஸ்லிம் சிங்கள கலவரத்தை உருவாக்கி அதனூடாக முஸ்லிம் சமூகத்தில் ஓர் கருத்தை பரப்பினார். அதுதான் இனக்கலவரத்தை உருவாக்கியவர் மஹிந்த ராஜபக்ஷா இதன் பின்னணியில் உள்ளவர் கோத்தாபய ராஜபக்ஷா ஆனால் இது சதித்திட்டம் என்பதை பேருவளை மக்கள் 2018 உள்ளூராட்சி மன்றம் தேர்தலில் பேருவளை நகரசபையில் ஸ்ரீ லங்கா பொதுஜன கட்சியை வெற்றியடைய செய்து நிருபித்தார்கள்.

கிழக்கு மாகாண உட்பட நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களை சந்திக்கும் இப் பயணத்தில் முஸ்லிம் சமுகம் தங்களுடன் உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

வெலிகம நகரசபை முன்னால் தலைவர் மொஹமட் ஹுஸைன் ஹாஜியார் முஹம்மத் தனதுரையில்,

உங்கள் அனைவருக்கும் தெரியும் 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா அவர்களை தோல்வியடைய செய்வதற்காக சர்வதேச மற்றும் உள்ளூரில் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டது. அதன் ஒருபகுதியாக சிங்கள மக்களின் வாக்குகளை குறைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மறுபுறம் சிங்கள முஸ்லிம் சமுகத்திற்கிடையே இனக்கலவரங்களை உருவாக்கி அதனூடாக அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா அவர்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் காணப்பட்ட உறவுகளை துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர்.

என்றாலும் சிங்கள மக்களிடம் ஊடகங்கள் ஊடாக இது பற்றிய தெளிவுகள் வழங்கப்பட்டமையினால் தெளிவு பெற்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கென்று தனியாக ஊடகங்கள் காணப்படுவதில்லை. தற்போது காணப்படும் தமிழ் ஊடகங்கள் மூலம் இனவாதம் சார்ந்த கருத்துக்கள் பகிரப்பட்டு மஹிந்த ராஜபக்ஷா மற்றும் ராஜபக்ஷா குடும்பம் என்றால் முஸ்லிம்களின் எதிரி என்ற மனப்பதிவை முஸ்லிம் சமூகத்திற்குள் உருவாக்கி விட்டனர்.

இதனால் கோத்தாபய ராஜபக்ஷா என்றால் முஸ்லிம்களுக்கு இன்னொரு இனக்கலரம் ஏற்படலாம் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அன்று பேருவளை அலுத்கம கலவர சூத்திரதாரிகளை கைது செய்வதாக வந்த அரசு இன்றுவரை அதற்காக பரிசீலனை இல்லை, ஜனாதிபதி ஆணைக்குழுக்களையும் நிறுவவில்லை. ஆனால் நல்லாட்சியின் நான்கு வருடங்களுக்குள் 300கும் மேற்பட்ட இனக்கலரங்கள் பதிவாகியுள்ளது.

எனவே நாட்டில் அபிவிருத்தி, சமாதானம், சகவாழ்வு, இனங்களுக்கிடையில் சகோதரத்துவம் ஏற்படுத்தும் விதத்தில் உங்களுடைய வாக்குகளை பயன்படுத்தவும்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி  தனதுரையில்,

பல்லாயிரம் ஆண்டுகளாக முஸ்லிம்கள் பௌத்த, இந்து, கிறிஸ்தவ சமுகத்துடன் ஒன்றாக வாழ்கின்றனர். ஆனால் இங்கு நாட்டின் பகுதிகளை கேட்டு போராடவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக நல்லாட்சியின் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்ட இச்சந்தர்பத்தில் யார் யுத்தங்களை ஊக்குவிக்கின்றனர் என்பதை சிந்திக்க வேண்டும்.

1980 தேர்தலை புறக்கணித்து, யாழ்ப்பாண நூல் நிலையத்திற்கு தீ வைத்து, 1983 கறுப்பு ஜூலை உருவாக்கி இனவாதத்தை பரப்பி நாட்டில் தமிழீழ போராட்டத்தை உருவாக்க வித்திட்டது ஐக்கிய தேசிய அரசாகும். இதனால் 30 ஆண்டுகளாக கஷ்டப்பட்டோம்.

இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ் சமூகம், அடுத்ததாக முஸ்லிம், சிங்கள சமூகம். இதனால் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தது. முஸ்லிம்களுக்கு விரட்டி விரட்டி அடிக்கப்பட்டது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தின் பாதுகாவலராக ஐக்கிய தேசிய கட்சி பார்க்கப்படுகிறது.

முஸ்லிம்கள் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்கின்றனர். ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அவர்கள் நாட்டில் இனக்கலவரங்களை உருவாக்கி நாட்டின் சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவத்தை சீர் குழைத்தனர். ஆனால் இந்தப் போராட்டத்தை தோற்கடித்து வடக்கில் ஓர் இலட்சம் ஹெக்டேர்கும் மேற்பட்ட காணிகளை இழந்த முஸ்லிம்களை மீள் குடியமர்த்தி சுமார் 200 பள்ளிவாசல்கள், பாடசாலைகளை அமைத்தது மஹிந்த ராஜபக்ஷா அரசின் 2ம் காலப்பகுதியிலாகும்.

ஆனால் ஓர் இனக்கலவரம் ஏற்பட்டது அலுத்கமையில் ஏற்பட்டது. அதனை எம்மால் தடுத்திருக்கலாம். ஆனால் சதித்திட்டம் நடந்தது இதனால் எம்மால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது தெரிந்து கொள்ளும் போது தாமதமாகிவிட்டோம்.

ஆனால் இந்த நல்லாட்சியின் சீர்கெட்ட நிர்வாகத்தினால் இன்று முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரை பெற்றுள்ளோம். ஆனால் அவர்களுடன் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சி பற்றியும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அமைச்சரவை பற்றியும்தான் பேசுகின்றனர்.

இறுதியாக ஓர் விடயம் நான் ஷமல் ராஜபக்ஷா, மஹிந்த ராஜபக்ஷா, கோத்தாபய ராஜபக்ஷா, பசில் ராஜபக்ஷா மற்றும் நாமல் ராஜபக்ஷா ஆகியோர்களுடன் நெருக்கமாக பழகியுள்ளேன். அவர்களின் வழக்குகளுக்கும் ஆஜராகியுள்ளேன். நான் உச்ச நம்பிக்கையுடன் ஓர் விடயம் கூறுகிறேன். இவர்கள் யாரிடமும் இனவாதமில்லை. அவ்வாறு இனவாதம் இருந்தால் நான் இவர்களின் வழக்குகளுக்கு ஆஜராக மாட்டேன்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா தனதுரையில்,

முஸ்லிம் சமூகத்தை சந்திக்க கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். எமக்கு யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளாக சந்தோஷமாக வாழக்கிடைத்தது. ஆனால் இன்று பயத்துடன் வாழ்கிறோம். இதற்கான காரணம் எமது தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தமையாகும். இதனால் முஸ்லிம்களுக்கு முதற்தடவையாக ஜும்மாவிற்கு பள்ளிவாசலுக்கும் செல்லக்கிடைக்கவில்லை. அவ்வாறு இன்று நாட்டின் வீழ்ச்சியுற்றுள்ளது. இதனால் வெற்றிலைக்கும் வரி அறவிடும் நிலையேற்பட்டுள்ளது. நாம் ஆரம்பித்த செயற்திட்டங்களை திறந்து வைக்கும் இவ்வரசு எமக்கே குற்றமும் சாட்டுகின்றனர். அது மாத்திரமல்ல எமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்து எனது 93 வயது பாட்டியையும் விட்டு வைக்கவில்லை.

Ibnu Aasad




5 comments:

  1. Such a big coverage for these liars?
    Now it is a well known fact that all most all the Anti Muslim Forces are openly supporting the SLPP... Candidate...
    May Allah protect Sri Lanka from these Cruel and Evil Forces Agendas..

    ReplyDelete
  2. Southern Muslims have taken a timely decision and they are brave enogh to give guidance to Muslim community in Sri Lanka to choose the correct path. There are no choice other than to support Gotabaya without going through the so called Muslim leaders who were doing brokering and political trading.

    ReplyDelete
  3. WHAT BROTHER SEENI MOHAMED SIDEEQUE HAS COMMENTED IS VERY APPROPRIATE AT THIS MOMENT. Gotabaya is a man of "WORD" and a "DISCIPLINARIAN", now in politics too.
    This is what the Sri Lankan Muslims should also begin to know. His promise to "PEACE" and "HARMONY" for all communities will be fulfilled once he is voted the next President of Sri Lanka. The duped and hoodwinked Muslim voters who were made to “vote” the “Hansaya” have begun to understand the treachery of these Muslim Civil Society Leaders, Community Leaders, and Ulema Sabai Leaders by the action of the “Yahapalana Government” now. They are “disgruntled” and they have begun to show their displeasure and have begun to retaliate against these so-called deceptive, hoodwinking and opportunistic Muslim Politicians, Muslim Political parties and their leaders, Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders to safeguard their legitimate “Muslim Rights” and work towards “National Reconciliation”.The Muslim Vote bank should support Gotabaya wholeheartedly, Insha Allah.
    Noor Nizam - The Muslim Voice".

    ReplyDelete
  4. Strange...When will our Muslims ever learn? even after knowing that Gota was behind all these activities against Muslims, people still seems to support him and trust him.

    ReplyDelete

Powered by Blogger.